நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் உதுமான் மொய்தீன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் மேலாண்மை கல்வி துறை தலைவர் முனைவர் ஹாஜி ஆர். காதர் முகைதீன் எம்பிஏ முதலாம் ஆண்டு வகுப்பை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.
முன்னதாக துறை தலைவர் முனைவர் ஓ.எம் ஹாஜா முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்சிகள் அனைத்தையும் துறை இணை பேராசிரியர் எஸ். சாகுல் ஹமீது தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் துறை பேராசிரியர் முனைவர் முஹம்மது சித்திக் நன்றியுரை ஆற்றினார்.
இதில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள் : நூவன்னா
மாஷா அல்லாஹ்
ReplyDeleteசூப்பர்
இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்