.

Pages

Friday, September 26, 2014

மடி வீக்க நோயால் பாதிப்படைந்த பரிதாப ஆடு ! [ படம் இணைப்பு ]

முத்துப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் தஸ்தகீர். இவரின் பிரதான தொழிலாக தனது இருப்பிடத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். சமீபத்தில் இவரது வளர்ப்பில் உள்ள நாட்டு இன ஆடு ஒன்று 3 குட்டிகள் ஈன்றது. ஆட்டின் மடி பெரிதாக வீங்கி கொண்டு செல்வதால் இவற்றை துணியால் சுற்றி கட்டிவைத்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் தெரு நாய்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க ஆடு எந்நேரமும் தஸ்தகீரின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

இதுகுறித்து தஸ்தகீர் நம்மிடம் கூறுகையில்...
'கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது ஆடு 3 குட்டிகளை ஈன்றது. ஆரம்பத்தில் ஆட்டின் மடி சிறிதாக காணப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல மடி பெரிதாக வளர்ந்து வந்தது. பால் சுரக்கும் போது பாலில் இரத்தமும் கலந்து வந்தது. இவை எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே முத்துப்பேட்டை கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டை கொண்டு சென்றேன். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஆட்டிற்கு மடி வீக்க நோய் தாக்கியுள்ளதாக கூறினார். தற்போது ஆடு எனது கண்காணிப்பில் இருந்து வருகிறது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறேன். இருந்தும் வீக்கம் வடியவில்லை' என்றார்.

ஆடுகளில் மடி வீக்க நோயைத் தடுப்பது குறித்து மருத்துவம் கூறுவது என்ன ?
பால் கறவைக்குப் பிறகு ஆட்டின் பால் காம்பு  30 நிமிடங்கள் திறந்த நிலையில் இருப்பதால் அந்நேரத்தில் அவை தரையில் படுக்க நேரிட்டால் பால் காம்பில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் பால் கறந்த பின் அவற்றிற்குத் தீவனம் அளிப்பதன் மூலம் அவை தரையில் படுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது.

செய்தி மற்றும் படம் :
முத்துப்பேட்டை சூனா ஈனா

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.