.

Pages

Sunday, September 21, 2014

க்ளிக்.. க்ளிக்... சில சுவாரஸ்யங்கள் ! [ படங்கள் இணைப்பு ]

படங்கள் ஒவ்வொன்றும் நம்மை சிந்திக்க வைக்குமா !?
இப்புடி ஆளாளுக்கு லாரி பின்னாடி கம்பை தூக்கிட்டு போனா, பின்னே மின்கம்பிகள் அறுந்து நம்மீதே விழாதா என்ன !? சரக்கே கொஞ்சம் குறைச்சி ஏத்துங்கப்பா... உரசிடப்போவுது :)

லாரியின் பாடி ரொம்ப ஸ்ட்ராங் ! சாலையின் பாலம் ரொம்ப வீக் ! சாலையே இல்லே ! பின்னே வண்டியை இப்புடி ஓட்டுனா எப்பூடி !?  இதான் கெதி ! 

ஏம்பா உங்களாலே வூட்டு பிள்ளைகளின் அட்டகாசம் தாங்க முடியலைப்பா. போய் படிப்பை பாருங்க... மணி ஆட்டுனது போதும்

விலை சல்லிஸாம்ல...குழந்தைகளுக்கு குதுகலம் ! பூனை, காக்கைக்கு வேட்டைதான் போங்க !? 

நிறைய ஊத்துங்க பாய், எதிர்கால உணவா நமக்கு ரொம்ப பயன்படும்.

பழுதடைந்த மின்கம்பங்களின் நிலையை போக்க ஒரு மாட்டுவண்டி என்ன ? ஏற்றிச்செல்ல நூறு மாட்டு வண்டிகள் தேவை

எதிர்கால தண்ணீர் பஞ்சத்துக்கு வெள்ளோட்டமா இது !? பயமாயிருக்கு 

குடிகாரர்களுக்கு...செல்பேசி பிரியர்களுக்கு...வாகன விதியை பின்பற்றாதவர்களுக்கு...அச்சமூட்டி எச்சரிக்குமா இந்த நிகழ்வு !?

ஈகோ இல்லாமல் ஒற்றுமையுடன் பணி செய்யும் இவர்கள்... மெய்யாலுமே ஒஸ்தியானவங்க 
இம்ப்போர்ட் மரங்களோ !? இப்படி அழிச்சிக்கிட்டுப் போனா 'பசுமை எங்கேன்னு ?' தேட வேண்டியதுதான்

அட மெய்யாலுமே இவ்க உள்ளூர் நிருபருங்கோ ! 
கணபதி ஸார், இவங்ககிட்டே நம்மூரைப் பத்தி கொஞ்சம் நல்லா எழுதச்சொல்லுங்க :)

தொகுப்பு: சேக்கனா நிஜாம்
இது ஒரு மீள் பதிவு

2 comments:

  1. பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் நீ பாதி தின்றால் அது லட்சம் ரூபாய் ....

    கோழிகுஞ்சு தேடிவந்த கோபாலா அதை கூடைக்குள்ளே வைத்திருக்கேன் கோபாலா ....

    ReplyDelete
  2. புகைப் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையை சொல்வதாக உள்ளது. அருமை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.