.

Pages

Tuesday, September 30, 2014

பட்டுக்கோட்டையில் அதிமுகவினர் நடத்திய அமைதி ஊர்வலம் ! [ படங்கள் இணைப்பு ]

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு அளித்த தீர்ப்பை எதிர்த்து பட்டுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்  நடத்தினர். அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி தலைமையில் பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு, நகர செயலாளர் பாரதி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நகர தலைவர் குமார், நகர செயலாளர் பாண்டியராஜன், அனி சேரா ஓட்டுநர் மாவட்ட தலைவர் பாஸ்கர், முன்னாள் நகரசெயலாளர் விவேகானந்தன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றம் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக பேருந்துநிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மணிக்கூண்டினை அடைந்தது. அங்கு கூடிய அதிமுகவினர் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்பபு வழங்கியதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.







நிருபர் I.M. ராஜா ( பட்டுக்கோட்டை )

1 comment:

  1. மானம் கெட்ட தமிழினம்.. மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்களுக்காக அனுதாபப் படுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

    கோமளவல்லி - இன் 91 -94 வரை சம்பளம் ருபாய் 60/- கொல்லைஅடித்தது 5,000 கோடி! எப்படி ?

    " ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்னு"
    சொன்ன புரட்சி தலைவரோட கட்சியா இது.... இப்படி ஒரு குற்றவாளிக்கு ஜாமீன் வாங்குறீங்க.... இது புரட்சித்தலைவரின் கொள்கையை காற்றில் பறக்கவிட்டு ... புரட்சித்தலைவியின் ஊழல் கொள்கையை தூக்கி பிடிக்கும் கொள்ளையர் பாதுகாப்பு கட்சி.

    மக்களே சிந்தியுங்கள்.இவர்கள் போன்ற ஆட்களின் ஆட்சி நமக்கு தேவையா என்று!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.