.

Pages

Monday, September 29, 2014

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய இலவச மருத்துவக் கருத்தரங்கு !

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை 28-09-2014  அன்று காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை, நீரிழிவு நோய் பற்றிய இலவச மருத்துவக் கருத்தரங்கு ஒன்றை சிங்கப்பூரில் பீட்டி சாலையிலுள்ள சிண்டா கலையரங்கத்தில் நடத்தியது.

சிங்கப்பூர் டான் டோக் செங் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பிரபல நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜனாப் அப்துல் ஷக்கூர், இந்தக் கருத்தரங்கை நடத்தினார். கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது. சிண்டாவின் தலைமை அதிகாரி திரு பரதன், சிறப்பு விருந்தினாராகக் கலந்துகொண்டார். சங்கத்தின் துணைத்தலைவர் ஜனாப் கலந்தர் மொஹிதீன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கை, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு நிக்சன் செல்வராஜ் வழிநடத்தினார். சங்கத்தின் செயலாளர் ஜனாப் அப்துல் சுபஹான் நன்றி கூறினார்.

கருத்தரங்கை நடத்திய டாக்டர் ஜனாப் அப்துல் ஷக்கூருக்கு, சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ஜனாப் ஹாஜி முஹம்மது ஜாபர் பொன்னாடைப் போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

செய்தி: முனைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர்
தலைவர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், சிங்கப்பூர் 

தகவல் : முதுவை ஹிதாயத்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.