.

Pages

Monday, September 22, 2014

அதிரை பேரூராட்சியின் வார்டு உறுப்பினர்களிடம் நறுக்குன்னு கேட்ட நான்கு கேள்விகள் ! [ காணொளி ]

அதிரை பேரூராட்சியின் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பொறுப்பில் இருந்து வரும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் இன்னும் சில மாதங்களில் நான்கு ஆண்டுகள் எட்டப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த நான்கு ஆண்டுகளில் வார்டு பகுதி மக்களுக்காக இவர்கள் செய்த பணிகள் என்ன ? செய்ய வேண்டிய மீதமுள்ள பணிகள் என்னென்ன ? வார்டு பகுதி மக்கள் மற்றும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் ஆகியோரின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது ? மீண்டும் போட்டியிட எண்ணமுண்டா ? உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து அதிரை பேரூராட்சியின் தலைவர் - துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பதிவு செய்ய எண்ணினோம்.

இவற்றை உடனடியாக செயல்படுத்தும் விதமாக சமீப நாட்களாக அதிரை நியூஸுக்காக தேனீ போல் சுறுசுறுப்பாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று செய்திகளை சேகரித்து நமக்கு வழங்கிகொண்டிருக்கும் 'இளம் செய்தியாளர்' நூவன்னா என்கிற நூர் முஹம்மது மற்றும் நமது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் அசார் ஆகியோரிடம் கூறினோம்.

உடனே களத்தில் இறங்கிய இருவரும் முதல் கட்டமாக அதிரை பேரூராட்சியின் வார்டு உறுப்பினர்கள் முஹம்மது இப்ராஹீம் ( 21 வது வார்டு ), சபுரன் ஜமீலா ( 10 வது வார்டு ), காளிதாஸ் ( 7 வது வார்டு ), உதய குமார் ( 2 வது வார்டு ), முஹம்மது செரிஃப் ( 14 வது வார்டு ), சித்ரா ( 20 வது வார்டு ) ஆகியோரை சந்தித்து நேர்காணலை நடத்தினர்.

நறுக்குன்னு கேட்ட நான்கு கேள்விகளுக்கு இதோ அவர்களின் பதில்...


குறிப்பு : மீதமுள்ளவர்களின் நேர்காணல் விரைவில் பதிவில்...

3 comments:

  1. அதிரையில் அரசியல் கட்சிகளின் சார்பாக மற்றும் சுயோட்சை வேட்பாளர் நன்றாக பேசக்கூடியவர்களாக இருக்க வேண்டும்...

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    பேட்டிக்கும் நன்றி.‎

    அருமையான பேட்டி, இப்படி பேட்டி எடுத்து பொதுவில் போடுவதால் ‎வார்டு உறுப்பினர்களுக்கும், வார்டில் குடியிருப்பவர்களுக்கும், மற்றும் ‎தலைவர், துணைத் தலைவர், நிர்வாக இயக்குனர் போன்றோர்களுக்கு ‎மேலும் மேலும் என்னென்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்று ‎தூண்டும்.‎

    ஆனபோதிலும், இதுமாதிரி பொறுப்புகளுக்கு வர விரும்புவர்கள் ஒருகணம் ‎தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கணும், அதாவது நாம் இந்த பொறுப்புக்கு ‎தகுதியானவரா, சரியானவரா, என்று ஆராய்ந்து பார்க்கணும்.‎

    இப்படி ஒவ்வொரு பொறுப்புதாரிகளும் பொறுப்புக்கு வரும்முன் ஆராந்து ‎பார்த்து வந்து இருந்தால் நம் பாரதம் இந்த உலகில் மிகப் பெரும் ‎வல்லமை வாய்ந்த நாடாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.‎

    இனியாவது ஆராய்து பார்த்து வருவார்களா?‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Consumer & Human Rights, Thanjavur District Organizer
    Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. Team work எனப்படும் கூட்டு முயற்சியும் Own discipline எனப்படும் தனிமனித சுய ஒழுக்கமும் இருந்தால் மட்டுமே இதுபோன்ற காரியங்களை செவ்வனே செய்யமுடியும் இல்லையேல் செவிடன் காதில் ஊதும் சங்கு போல் அது பயனற்று போய்விடும் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.