.

Pages

Friday, September 19, 2014

அதிரை அருகே இருசக்கர வாகனத்துக்கு தீ வைப்பு ! போலீசார் விசாரணை !!

அதிரை அருகே உள்ள பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் இருசக்கர வாகனத்தை தனது வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு உறங்கச்சென்றார். அப்போது தனது  இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அதிரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே காவல்துறை ஆய்வாளர் ரவிசந்திரன், துணை ஆய்வாளர் பசுபதி, எஸ்பிசிஐடி அய்யாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.