.

Pages

Friday, September 19, 2014

அதிரையில் டீ கடை வேல்முருகன் மீது தாக்குதல் ! போலீசார் விசாரணை !! [ படங்கள் இணைப்பு ]

அதிரை அருகே உள்ள மஞ்சவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மகன் வேல்முருகன். அதிரை பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கட்டிடத்தில் 'வேல்முருகன்' என்ற பெயரில் டீ கடை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதே இடத்தின் ஒரு பகுதியில் தம்பிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் சிங்காரவேலு இட்லி கடை நடத்தி வருகிறார்.

இன்று மதியம் டீ குடிப்பதற்காக கடைக்கு வந்த 4 பேர்கள் வேல்முருகனிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாய்த்தகராறு முற்றியதில் வேல்முருகனின் முகத்தில் கரண்டியால் தாக்கப்பட்டார். இதில் அவரது கன்னத்தில் காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. அப்போது அருகில் நின்ற சிங்கரா வேலு சமரச முயற்சியில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த 4 பேரும் கடையில் இருந்த கொதிக்கும் எண்ணையை தூக்கி சிங்கார வேலு மீது கொட்டினார்கள். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிரை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தப்பியோடிய நபர்களை தேடி வருகிறார்கள். இதனால் பேருந்து நிலையப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.




1 comment:

  1. பாதிக்கப்பட்ட வேல்முருகனுக்கு உரிய நீதியையும்,நஷ்டைடும் பெற்றுக்ககொடுக்குமாறு அதிரை காவல் துறையை கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.