இக்கூட்டத்தில் அதிரை TNTJ துபாய் கிளையின் முந்தைய செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டு மேற்கொண்டு செயல்பாட்டுத் திட்டங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளப்பட்டது. மேலும் அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டுமான பணிக்காக அமீரகத்திலிருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கான கணக்கு விபரங்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியாக 2 வருடத்திற்கு ஒருமுறை நிர்வாகிகளை மாற்றியமைப்பது பற்றி பேசப்பட்டு அதன்படி அதிரை TNTJ துபாய் மண்டல கிளைக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இன்றைய தேதியிலிருந்து அதிரை TNTJ துபாய் மண்டல கிளைக்கு புதிய நிர்வாகிகளாக கீழ் கண்டவர்கள் பொறுப்பு வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி பொறுப்பாளர்கள் :
--------------------------------------
1,S.மக்தூம் நெய்னா
2,J.நசீர் அகமது
3,M.முகம்மது சலீம்
மற்றும் துணைப் பொறுப்பாளர்களாக ....
M.முகம்மது மீரா சாகிப்
K.பஷீர் அகமது
K.அப்துல் அஜீஸ்
அதிரை எக்ஸ்பிரஸ் வலைதள செய்தி ....
ReplyDelete//அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 25 பேர் பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு சங்க வளாகத்தில் நடைபெற்றதுமேலும் சங்கத்தின் வருங்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதில் சங்க வரவு செலவு கணக்கு குறித்தும் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு பின்னர் இனிதாக நிகழ்ச்சி நிறைவு பெற்றது. //
அபூபக்கர் சொன்ன கருத்து .......
சம்சுல் இஸ்லாம் சங்கம் அதிரையில் மிக பெரிய ஜமாத்தாக திகழும் இதன் ஓட்டுரிமை வெறும் 167 பேர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது .
இந்த சங்கம் சார்ந்த குடும்பத்தில் ஒருவருக்கு இதன் ஓட்டுரிமை அளிக்கபடவேண்டும் ஆண்கள் இல்லாத பட்சத்தில் இதன் ஓட்டுரிமை அந்த அந்த வீட்டு பெண்களுக்கு கொடுக்கப்படவேண்டும் .
மேலும் முந்தய காலங்களில் இதில் பதவி வகுத்த தலைவர் மர்கூம் காலிகட் அப்துல்கரீம் என்பவர் நமதூரின் ஒரு வீட்டாரின் கணவன் மனைவி பிரைச்சனைகள் அவரிடம் செல்ல ஏற்கனவே கல்யாணம் முடித்த அவனை அவனின் சுயரூபம் தெரியாமல் மாப்பிள்ளை எடுத்துவிட்டனர் அந்த ஒரு ஊரறிந்த ஊதாரி அவன் சொன்ன பொய்களை வைத்து அவனுக்கு நான் மேலே கூறிய சங்க தலைவர் குருட்டு தனமாக சிபாரிசு செய்தவகையில் அந்த ஊதாரி அந்த பெண்ணை வார்த்தை சொல்ல அதன் பின் அவன் முடித்த கல்யங்களோ மூன்று இதை பல முறை நான் மேற்கண்ட சங்க தலைவரிடம் நேரில் சென்று சொன்னேன் அதற்கு அவரிடம் பொறுப்பான பதில் இல்லை .இப்படி எத்தனையோ குடும்பவாழ்க்கையில் விளையாடும் இந்த சங்க நிர்வாகிகளே அல்லாஹ்விற்கு பயந்து நடந்துகொள்ளுங்கள் .மேற்கண்ட விசயங்களுக்கு என்னிடம் நிறைய ஆதாரங்கள் உண்டு .இறந்தவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லிக்கொண்டு இருக்கும் வேளையில் இறக்கபோகும் நாமும் அல்லாஹ்வின் கேள்விகளுக்கு பதில் சொல்லியாகனும்.பதவியில் இருப்போர் அல்லாஹ்வை பயந்து நடந்துகொள்ளுங்கள் .
பதவியில் இருப்போர் அல்லாஹ்வை பயந்து நடந்துகொள்ளுங்கள். புதிய நிருவாகிகளின் பனி சிறக்க என் வாழ்துக்களும் துவாவும்.
ReplyDeleteஅன்புடன்
மான் ஷேக்
Human Rights
Adirampattinam-614701
பிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்
ReplyDeleteوَهُوَ الَّذِي جَعَلَكُمْ خَلَائِفَ الْأَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِّيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ ۗ إِنَّ رَبَّكَ سَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ
அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன்;. மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன். 6:165
أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا ۚ لَّهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு. 8:4
ஸஹீஹுல் புகாரி 2409. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளாராவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். "இவையனைத்தையும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்" என்று கூறிவிட்டு இப்னு உமர்(ரலி) மேலும் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மனிதன் தன் தந்தையின் செல்வத்திற்கும் பொறுப்பாளன் ஆவான். அது குறித்தும் அவன் விசாரிக்கப்படுவான். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் (ஏதேனும் ஒரு விஷயத்திற்குப்) பொறுப்பானவர்களே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்" என்றும் கூறினார்கள் என நான் நினைக்கிறேன்.
ReplyDeleteVolume:2,Book:43.