.

Pages

Wednesday, September 17, 2014

செல்போன் மூலம் “தடுப்பூசி” தகவல்கள் ! - இதை முடிந்த வரை Share செய்க...

பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National vaccine remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

Immunize<space><குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி>
என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

உதாரணத்துக்கு, Immunize Isra 12-06-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.

உடனே ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.

நன்றி : விகடன்

1 comment:

  1. அவசர காலத்தில் மக்கள் டிவி தொடரில் மூழ்கி விடுவதால் SMS பார்ப்பதில்லை, தேவை இல்லாத மெசேஜ் வருவதால் முக்கியமான செய்தியும் நாம் தவறவிடுகிறோம், ஆகவே மருத்துவரின் ஆலோசனை படி நடந்துக்கொள்வது நல்லது.

    குழந்தை நலனில் அக்கறை காட்டுவதை விட வேற என்ன முக்கிய வேலை ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.