.

Pages

Monday, September 29, 2014

அதிரையில் அள்ளப்படாத குப்பைகள் [ படங்கள் இணைப்பு ]

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிலவற்றில் கடந்த சில நாட்களாக சேரும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்தப்படாததால் குமிந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிரையில் அவ்வவ்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் தோற்று நோய் பரவும் வாய்ப்பு இருப்பதாக   பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகம் இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு துப்புரவு ஊழியர்களை அனுப்பி தேங்கி காணப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



7 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    அதிரை முழுக்க குப்பையாக இருப்பதினால் குப்பையின் இருப்பிடம் ‎தெரிவிக்கபடவில்லையாக்கும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு ஒரு ‎பழமொழி இருக்கே. ‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. துப்புரவு ஊழியர்கள் அம்மாவுக்கு ஆதரவாக எதிர்ப்பை காட்டுகிறார்களோ என்னவோ, அந்தந்த வார்டு கௌன்சிலர்கல் அக்கறை இல்லாததையும் காட்டுகிறது, ஏன் இவர்கள் போராட்டம் நடத்தக்கூடாது?.

    ReplyDelete
  3. தம்பிகள் நுவண்ணா நிஜாம் ரெண்டு பேரும் வீதி வீதியா சென்று போட்டோ எடுத்து இருக்கிறார்கள்.வாழ்த்துக்கள் ஆனால் முன்பு உள்ள காலத்தை விட தற்போது உள்ள நிர்வாகம் ஒரு அளவுக்கு தேவலாம்.மாலை நேரங்களிலும் குப்பைகள் சுத்தம் செய்வதாக சொல்லபடுகிரது.

    ReplyDelete
  4. நேர்மையாக களத்தில் நின்று சேகரித்து பதிவிட்ட அதிரை நியூஸை பாராட்டுகிறோம். அதிரையின் மீதுமுள்ள பகுதிகளின் குமிந்து அருவருப்பாக காட்சியளிக்கும் குப்பைகளின் புகைப்படங்களை எடுத்து பதிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    குப்பை அள்ளும் டிராக்டர் பழுதடைந்து பேரூராட்சி பின்புறமாக உள்ள குடோனில் முடங்கி கிடப்பதாக நேரில் பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள்.
    செயல் இழந்து காணப்படும் பேரூராட்சியை கண்டித்து அதிரையின் ஒரு பகுதியினர் நாளை மாபெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக செய்தி வெளியாகி உள்ளது.
    அதிரை பேரூராட்சி நிர்வாகத்தினர் வாடகைக்கு ஒரு இரண்டு மூன்று வாகனங்களையாவது எடுத்து குப்பை அள்ளுவதற்கு முயற்சியில் ஈடுபட வேண்டும்.

    ReplyDelete
  5. இந்தக் குப்பைகளினால் ஊர் மாசுபடுவதொடு தொற்று நோய்களும் இக்குப்பையிலிருந்து தான் உருவாகும். பிளாஸ்ட்டிக் பைகளை மட்டும் ஒழித்து புண்ணியமில்லை. ஊரை சுத்தப் படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    ReplyDelete
  6. இந்தக் குப்பைகளினால் ஊர் மாசுபடுவதொடு தொற்று நோய்களும் இக்குப்பையிலிருந்து தான் உருவாகும். பிளாஸ்ட்டிக் பைகளை மட்டும் ஒழித்து புண்ணியமில்லை. ஊரை சுத்தப் படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    ReplyDelete
  7. தன் வீட்டு வாசல் சுத்தமாக இருக்கவேண்டும் பிறர் வீட்டு சுகாதரம் வாசலும் வீணாப்போன என்ன என்று எண்ணும் இந்த குப்பைக்கொண்டும் மிருகங்கப் ப....னிகளை செருப்பால் அடித்து ஊரை விட்டு விரட்டவேண்டும்...அவர்களின் வாயில் இந்த குப்பைகளை திணிக்க வேண்டும் .பேருராட்சியை மட்டும் குற்றம் சொல்லி புண்ணியமில்லை....இந்த தரங்ககெட்ட தரித்திரியம் பிடைப்பிடித்த கூட்டமும் ஒழிய வேண்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.