.

Pages

Saturday, September 27, 2014

அதிரையில் பரிதவித்த பயணிகளை பைத்துல்மாலில் தங்க வைத்து பத்திரமாக வழியனுப்பி வைத்த எஸ்டிபிஐ கட்சியினர் !

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் தமிழகமெங்கும் அதிமுகவினர் கடையடைப்பு - ஆர்ப்பாட்டம் - கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிரையிலும் இன்று மாலை உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. வாகன போக்குவரத்திலும் தடை ஏற்பட்டது. இதனால் தொலை தூரங்களுக்கு செல்லும் பயணிகள் பாதிப்படைந்தனர்.

சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்திலேயே பரிதவித்துக்கொண்டிருந்த 26 பயணிகளை எஸ்டிபிஐ கட்சியினர் பத்திரமாக மீட்டு அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டு பைத்துல்மால் அலுவலக மாடியில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேநீர், பிஸ்கட் வழங்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் குறிப்பாக கிருஷ்ணாஜி பட்டினம், கோட்டை பட்டினம், அம்மாபட்டினம், தொண்டி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகளை நான்கு வாகனங்களில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பணிகளை எஸ்டிபிஐ மற்றும் PFI அமைப்பை சேர்ந்தவர்கள் செய்தனர்.

செய்தி மற்றும் படங்கள் :
இப்ராஹீம் அலி









No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.