அதிரை நியூஸ் வலைத்தளத்தின் நோக்கம் அதிரை மற்றும் அதன் வட்டாரப்பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை சாதி மத இன பேதமின்றி வெளியிட்டு அதிரையின் அனைத்து மக்களின் கவனத்துக்கும் சென்று சேர்க்க வேண்டுமென்பதே.
அவ்வகையில்தான் எவ்வித தவறும் நிகழ்ந்துவிடாதவகையில் இந்த வலைத்தளம் தொடங்கிய காலம் முதல் சுத்தமான மனதுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
அதே முறையில்தான் கருத்துச் சுதந்திரங்களுக்கு எவ்வித தடையும் போடாமல் அனைவரின் கருத்தையும் தடை இல்லாமல் பிரசுரித்தும் வருகிறோம்.
கடந்த சில நாட்களாக நாம் பதியப்படும் சில செய்திகளின் பின்னூட்டங்களில் தனி நபர் விமர்சனங்களும், நாகரிகற்ற வார்த்தைகளால் மற்றவர்களைப் புண்படுத்துவது போன்ற அம்சங்களும் அமைந்து இருப்பதை நாம் வருத்தத்துடன் உணர முடிகிறது.
அதிரை நியூஸ் தனது கண்ணியத்தை கட்டிக் காக்க நினைக்கிறது. இந்த மண்ணில் சகோதரத்துவமும் சமத்துவமும் தழைத்து வளர்ந்திருக்கிறது. அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகளால் சமுதாயத்தின் பிரிவினர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதற்கு அதிரை நியூசை ஒரு களமாகப் பயன்படுத்துவதை நிர்வாகம் அனுமதிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எவராக இருந்தாலும் தங்களின் கருத்தை பண்புடனும் கண்ணியத்துடன் பதிய நினைத்தால் அவர்களை அதிரை நியூஸ் ஊக்கப்படுத்தி வரவேற்கும் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறோம்.
என்றும் உங்களின் அன்பான சேவையில்,
அதிரை நியூஸ்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இணையதளம் தேவையா என்றால், அது தேவையே என்ற நிலையில் இருந்து ஒரு இம்மியும் மாறாதது.
இன்றைய சூழலில் தகவல்கள் பரிமாற்றங்கள், முக்கிய மற்றும் எல்லா நிகழ்வுகள், இன்னும் அனேக சங்கதிகளை சம்பவங்களை நாம் இணையத்தின் வாயிலாக பார்க்கின்றோம், அறிகின்றோம், தெரிகின்றோம்.
பல இணையதளங்கள் எந்த ஒரு பாகுபாடு இல்லாமல் உயர்ந்த நோக்கத்தோடு நடுத்தரமான நிலையில் இருந்து மாறாமல் இயங்கிக் கொண்டு வருகின்றது. அப்படியான வகையில் இந்த அதிரை நியூஸும் ஒன்று.
இதில் பதியப்படுகின்ற அனைத்தும் பாகுபாடு இல்லாமல் பதியப்படுகிறது. பதியப்படும் நோக்கம் எல்லோருக்கும் சென்றடையவேண்டும் என்பதே, சண்டை போடுவதற்காக அல்ல, கடந்த பல சமயங்களில் பதியப்பட்ட ஒரு சில பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வாயிலாக நாகரீகமற்ற வார்த்தைகளை உபயோகித்து மறைமுகமாக சாடுவது, வஞ்சிப்பது போன்றவைகள் நடந்து வருகின்றது. இது மாதிரி கண்ணியமற்ற முறையில் யாரும் பின்னூட்டம் இடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தனிப்பட முறையில் கருத்து வேறுபாடு இருந்தால் நேரில் சென்று சரிசெய்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Consumer & Human Rights, Thanjavur District Organizer
Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
சட்டப்பிரிவு 66 A என்ன சொல்கிறது?
ReplyDeleteயாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :
விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது
தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது
யாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ
அவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு)மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று அபராதம் விதிக்கப்படும்.
வலைதள நாகரிகமில்லாமல் சிலர் அநாகரீகமாக கருத்திடுவது. கண்டிக்கக் கூடியது. எத்தனையோ வேலைகளுக்கும்,மன உளைச்சலுக்கும், சிரமத்திற்கும் மத்தியில் செய்திகள் சேகரித்து சேவை மனப் பான்மையுடன் அனைத்து தரப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிந்து வரும் எங்கள் குழுவினரின் சிரமத்தை உணர்ந்து நாகரீகமாக வாசகர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டால் எங்கள் குழுவினரும் தாங்களுக்காக சிரமம்பாராமல் அனைத்து செய்திகளையும் அள்ளித் தருவார்கள்.
ReplyDeleteஎங்களது சிரமங்களை உணர்ந்து அனைத்து அதிரை நியூஸ் வாசகர்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அதிரை நியுஸ் தனது பாதையில் சரியாகவே செல்கிறது. சிலநேரங்களில் சிலருக்கு சாதகமானச் செய்திகள் அதில் வரவில்லை என்றால் கசக்கத்தான் செய்யும்.
ReplyDeleteநியாங்கள் என்றுமே நிமிர்ந்தே நிற்கும்.
எதிர்ப்புகளை தாண்டி வெற்றிநடை போட வாழ்த்துக்கல் “அதிரைநியூஸ்”
ReplyDelete