.

Pages

Tuesday, September 23, 2014

அதிரை லயன்ஸ் சங்கம் ஏற்பாட்டில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு 60 ஆயிரம் மதிப்பீட்டில் குளியலறைகள் - கழிவறைகள் !

அதிரையை அடுத்து உள்ள ராஜாமடம் ராஜா சரபோஜி மன்னர் மடத்தில் உள்ள ராமகிருஷ்ணா சாரதா ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு குளியலறைகள் - இரண்டு கழிவறைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்டம் 324-A2 முன்னாள் ஆளுநர் முஹம்மது ரஃபி அவர்கள் குளியலறைகள் மற்றும் கழிவறைகளை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

அதிரை லயன் சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் முனைவர் N.M.I.அல் ஹாஜி, பொருளாளர் N.ஆறுமுகசாமி, லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் S.M. முஹம்மது மொய்தீன், பேராசிரியர் K.செய்யது அகமது கபீர், பேராசிரியர் மேஜர் S.P. கணபதி, சாரா அஹமது, சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக வரவேற்புரையை பேராசிரியர் மேஜர் S.P. கணபதி நிகழ்த்தினார். ஏற்புரையை காப்பக பொறுப்பாளர் நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் லயன் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் K.செய்யது அகமது கபீர் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், காப்பக பொறுப்பாளர்கள், குழந்தைகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குழந்தைகள் அனைவருக்கும் பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது.








No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.