இந்நிலையில் இன்று மதியம் ராஜஸ்தானில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட ஒட்டங்கள் வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக அதிரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. காற்றோட்டமான பகுதியில் ஒட்டகங்களை மேயவிட்டு அதற்கு தேவையான தீனிகளும் கொடுத்து வருகின்றனர். நல்ல திடகாத்திரமாக காணப்படும் ஒவ்வொரு ஒட்டங்களும் சராசரியாக 300 முதல் 350 கிலோ வரை எடையைக் கொண்டுள்ளது. தகவலறிந்த ஏராளமான சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து த.மு.மு.க நகர நிர்வாகிகளிடம் பேசிய வகையில்...
'வழக்கம் போல் இந்த வருடமும் கூட்டு குர்பானி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அதிரை கிளையின் சார்பில் முடிவு செய்துள்ளோம். இதற்காக நல்ல திடகாத்திரமான ஒட்டங்கள், மாடுகள் தகுதியுள்ள நபர் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டகத்தின் ஒரு பங்கின் விலை ரூபாய் 11,000/- எனவும், மாட்டின் ஒரு பங்கின் விலை ரூபாய் 1250/- எனவும் நிர்ணயம் செய்து பங்குகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு வருகின்றன. இதில் கிடைக்கும் தொகைகள் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவ உதவிக்காக மாத்திரம் செலவிடப்படும்' என்றார்கள்.
அராபிய ஆட்கள் தேவை ???????????
ReplyDeleteஇந்தியாவில் உள்ள அதிராம்பட்டினம் என்ற ஊரில் சுமார் 10 நாட்கள் ஒட்டகங்களை பராமரிக்க அனுபவமுள்ள காட்டரபிகள் தேவை விசா மற்றும் உணவு தங்கும் இடம் இலவசம் .
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்த ஒட்டகங்களை இப்படியான சூழலில் பார்க்கும்போது, 1990-ம் ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாள் லீவில் சவூதி-ரியாத் நகரத்திலிருந்து தமாம் நகருக்கு செல்லும் வழியில் பார்த்த ஞாபகம் வருது.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com