நமது வாழ்நாளில் எவ்வளவோ ஒப்பந்தங்களைப் பார்த்து இருக்கிறோம். திருமணம் கூட ஒரு ஒப்பந்தம்தான்- வணிகத்திலும் அடிப்படை வாய்வழி அல்லது எழுத்துவழி ஒப்பந்தம்தான் நிறைவேர்ரபடுகிறது. உலக வங்கியில் நாடுகள் கடன் வாங்குவதற்கும் ஒப்பந்தம் இருக்கிறது. நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதும் – மாநிலங்களுக்கிடையே நதி நீர்ப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதும் ஒப்பந்தம்தான். தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதும் ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான்.
இந்திய சட்டம் மற்றும் நீதித்துறையில் இந்தியன் காண்ட்ராக்ட் ஆக்ட் ( Indian Contract Act- 1872 ) என்ற ஒரு சட்டமே இருக்கிறது. இது ஒப்பந்தங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமாகும்.
“All agreements are contracts if they are made by the free consent of parties competent to contract for a LAWFUL CONSIDERATION AND WITH A LAWFUL OBJECT, and or not hereby expressly declared to be VOID. “ Chapter II /10 What agreements are Contracts.
என்று ஒப்பந்தங்களை அந்த சட்டம் வரையறை செய்கிறது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய வார்த்தைகள் யாவை என்றால் LAWFUL CONSIDERATION AND WITH A LAWFUL OBJECT ஆகியவையாகும் . ஒரு சட்டப்படியான பயனுக்காகவும் சட்டபடியான நோக்கத்துக்காகவும் போடப்படுவதே ஒப்பந்தம் என்கிற வகையில் வரும் என்று அந்த சட்டம் சொல்கிறது.
ஒரு உருப்படியான காரியத்துக்கு ஒப்பந்தம் போடுங்கள், ஒருவருக்கொருவரை இழிவு படுத்திக்கொள்ளவும், உன்னைவிட நான்தான் பெரியவன் என்று அடித்துக் கொள்ளவும் – நான் சொல்வதுதான் சரி என்பதை அரங்கேற்றவும் இருசாரார் இடையே போடப்படும் ஒப்பந்தம் எல்லாம் ஒப்பந்தமே ஆகாது; அவை ஆரம்ப நிலையிலேயே ஒதுக்கித்தள்ளபட வேண்டிய ஒப்பந்தங்கள் என்பதும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவையாகும் .
நாம் எதைப் பற்றிப் பேசப் போகிறோம் என்பதை இதுவரை இதைப் படிக்கும் நண்பர்கள் விளங்கி இருப்பார்கள். இருந்தாலும் சொல்லிவிடுவோம்.
அதிரை தாருத் தவ்ஹீத் என்கிற அமைப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அதிரைக் கிளையும் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள். அதன்படி இந்த இரு அமைப்பினரும் வரும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கொள்கையற்றவர்கள் யார் ? என்ற தலைப்பில் விவாதிக்க இருக்கிறார்கள். அதிரை சேதுரோட்டில் உள்ள பவித்ரா திருமண மண்டபத்தின் அரங்கில் இந்த விவாதம் நடைபெற இருக்கிறது. இது ஒரு கருத்தரங்கம் அல்ல. விவாத அரங்கு. ஒருவர் கருத்தை மற்றவர்கள் மறுக்கும் காரணங்களை சொல்லி அடுத்தவரைப் புரியவைக்க இந்த விவாத அரங்கை ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் என்றே நாம் நினைக்கிறோம். அடிப்படையில் இஸ்லாம் மார்க்கம் தொடர்பாக சிலருக்கு ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடுகளை இவர்களுக்குள் விவாதித்து ஒரு தரப்பை மறு தரப்பினர் ஏற்றுக் கொள்ள வைக்க முயற்சிப்பார்கள் என்பதே நமது புரிந்துணர்வு.
நமது ஆரம்பக் கேள்வி இப்படி ஒரு விவாதம் தேவைதானா ? என்பதே. இதனால் சமுதாயத்துக்கு என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது என்று தெரியவில்லை. இந்த விவாத அரங்கை ஏற்பாடு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அடிப்படையில் ஒருவர் கொண்டுள்ள கருத்தை அடுத்தவர் மீது திணிக்கவே முயலுவார்கள் என்பதும் இதனால் ஏற்கனவே சீர்கெட்டுப் போயிருக்கிற இரு தரப்பு உறவுகள் மேலும் சீர்கெடும் என்பதும்தான் நாம் உடனடி விளைவாகக் காண்பதாகும்.
நாட்டிலும் சமுதாயத்திலும் எவ்வளவோ சமூக பொருளாதார பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டி இருக்கின்றன. அதிரையைப் பொறுத்தவரை பல நோயாளிகள் தரமான சிகிச்சை பெற வழியின்றி தவித்துக் கிடக்கிறார்கள்; ஊரெங்கும் சுற்றுச் சூழல் கெட்டுப் போய் குப்பையும் கூளமுமாகக் கிடக்கிறது; பிளாஸ்டிக் கழிவுகள் நமது விவசாயத்தை முடக்கிப் போட்டு இருக்கிறது; நமது ஊரின் தெருக்களில் உள்ள குளங்களில் தண்ணீர் இல்லை; கடைமடைப் பகுதியான நமது ஊருக்கு காவிரி நீர் சரிவர வந்து சேரவில்லை; ஊரில் எல்லாத் தெருக்களிலும் மின்கம்பங்கள் தலையில் சாய்ந்து விழும் அபாயத்தில் நிற்கின்றன; நமது பள்ளிக் கூடங்களில் அரசுத்தேர்வுகளில் சரியான சதவீதத்தில் மாணவர்களின் தேர்ச்சிகள் இல்லை; சாக்கடை நீர் தெருவெங்கும் வழிந்து ஓடுகிறது; நமது மக்கள் வட்டிக்குப் பணம் வாங்கி சீரழிகிறார்கள்; வங்கிகளில் மட்டும் நமது பெண்களின் நகைகள் கோடிக் கணக்கான ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்; ஊரில் சரியான மருத்துவ வசதி இல்லை; ஊரில் ஒரு இரவு நேர மருத்துவ மனை இல்லை; அரசு மருத்துவமனையில் போதிய அளவு மருத்துவர்கள் இல்லை; ஊரின் அனைத்து எல்லைகளிலும் சாராயக்கடைகள் சக்கைபோடு போடுகின்றன; வயதானவர்களுக்கு முதியோர் பென்சன் வருவது இல்லை; படிக்கும் சிறுபான்மை இன மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை கிடைப்பதில்லை; ஊரின் நிலத்தடி நீர்வளம் வற்றிப் போய் வறண்டு கிடக்கிறது; முறையான போக்குவரத்து வசதிகளில் வளர்ச்சி காணப்படவில்லை; ஓடிக்கொண்டிருந்த கம்பன் ரயில் நிறுத்தப்பட்டு அதிரையைத்தவிர அனைத்து ஊர்களிலும் அகல ரயில் பாதை போடப்படுகிறது; நமக்காக கேட்க நாதி இல்லை.
இவ்வளவு தலையாய பிரச்னைகள் இருக்க, இருக்கும் இயக்கங்கள் ஊரின் நன்மைக்காக ஒன்று சேர்ந்து உருப்படியாக எதுவும் செய்யாமல் பிற மதத்தினரின் கேலிக்கு ஆளாகும் வகையில் இப்படி ஒரு தேவையற்ற விவாதமும் அதற்காக ஒரு ஒப்பந்தமும் செய்திருப்பது கேலிக் கூத்தாக இருக்கிறது என்பதை வேதனையுடன் குறிப்பிட விரும்புகிறோம்.
இவர்கள் விவாதிப்பதற்காக தேர்வு செய்திருக்கும் ஊரின் பகுதியையும் இடத்தையும் பாருங்கள். நாம் கற்பனையாக ஒன்றை நினைக்கிறோம். அரங்கின் உள்ளே விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வெளியே இரண்டு பிற மத சகோதரர்கள் இப்படித்தான் பேசிக் கொள்வார்கள்.
ஒருவர்: என்னய்யா மண்டபத்தில் என்ன விசேஷம் ?
மற்றவர்: முஸ்லீம் சமுதாயத்துக்குள்ளே ஒருத்தரை ஒருத்தர் வார்த்தையாலே அடிச்சுக்கிரானுக !
முதலாமவர்: அப்படியா ! அடிச்சுக்கிட்டுத் தொலையட்டும்.
என்றுதானே பேசிக் கொள்வார்கள் ? இது யாருக்குக் கேவலம் ? இதுவரை இந்த சமுதாயத்தை ஒருவரைத்தாக்கி ஒருவர் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டது போதாதா ? போலீஸ் நிலையங்களில் ஒருவர் மீது ஒருவர் புகார்கள் கொடுத்துக் கொண்டது போதாதா ? நம்மில் ஒருவரை நாமே காட்டிக் கொடுத்தது போதாதா ? இப்போது விவாத அரங்கு என்பது என்ன புதிய பரிணாம வளர்ச்சியா ? இதனால் என்ன பயன் ஏற்படப் போகிறது ?
ஒரு தரப்பு சொல்வதை அதில் எவ்வளவு நியாயம் இருந்தாலும் அவரவருக்குள் இருக்கும் ஈகோ என்கிற அகந்தை அடுத்தவரின் விவாதத்தில் இருக்கும் நியாயத்தை ஏற்று சரண் அடைந்துவிடுமா ? அதன் பிறகும் கூட அவர்களுக்குள் அறிக்கைப் போர் அறவே அற்றுப் போய்விடுமா ? இருதரப்பு இணைய தளங்களிலும் பதில் சொல்ல முடியாமல் ஓட்டமெடுத்தார் என்று விவாதத்தில் பங்கேற்றவரின் பெயரைப் போட்டு கேவலப்படுத்துவதைத்தவிர வேறு என்ன நடக்கப் போகிறது ?
எந்தப்பயனுமில்லாமல் இருக்கும் பகையை இன்னும் அதிகபடுத்திக் கொள்ளும் இந்த விவாத அரங்கை நடத்தாமல் அதற்கான ஏற்பாடுகளை இருதரப்பும் நிறுத்திக் கொள்வது என்று இன்னொரு ஒப்பந்தம் போட்டு முடித்துக் கொண்டால் நடுநிலையாளர்கள் பலர் மகிழ்வார்கள்.
ஒன்று படாவிட்டாலும் பரவாயில்லை; தொடர்ந்து வேறுபடாதீர்கள் என்று நல்ல எண்ணத்தோடு கேட்டுக் கொள்கிறோம். பல அன்பர்களின் மனக்குமுறலே இங்கு வார்த்தைகளாக வடிக்கப்பட்டிருக்கிறது.
இரு தரப்பிலும் உள்ள மார்க்கம் கற்ற மேதைகள் இந்தக் கட்டுரையின் அடிப்படை நோக்கத்தையும் நியாயத்தையும் தயவுசெய்து களங்கப் படுத்தாமல் – காரணம் கற்பிக்காமல் குறிப்பிட்ட நிகழ்வை மனம் ஒத்து இரத்து செய்தால் அந்தச் செயல் ஊரார் பலருக்கு மகிழ்வைத்தரும்.
Masha Allah good message for two partys
ReplyDeleteஒரு சாரார் எந்த பிரச்சனையாக இருந்தாலும் விவாதம் வைத்துக்கொள்வோமா? என்று கேட்கிறார்கள் மற்றொரு சாரார் அவங்க கூப்பிட்டு போகாமல் இருந்தா நல்லா இருக்காதே என்ற என்னம் எது எப்படியோ விவாதம் அமைதியான முறையில் நடந்தால் சரி.
ReplyDeleteசரியான பதிவு இது. என்னத்தசொல்ல...இவங்க எல்லோரும் குண்டாஞ்சட்டியிலெ குதிரை ஓட்டுபவர்கள்தான்.உங்கள் பதிவில் சுட்டிக்காட்டிய ஊரின் தேவைகள் எதையும் நிறைவேற்ற லாயக்கு அற்றவர்களே....
ReplyDeleteவிவாதங்கள் நடைபெறும் போதுதான் இஸ்ஸாமிய சமுதாயம் பழநன்மைகள் நம் சகோதரர்கள் அடைந்து இருக்கிறாா்கள் என்பதை மறுக்க முடியாது
ReplyDeleteZAEISA நிங்கள் இந்த ஊருக்கு செய்தது என்ன?
ReplyDeleteவிதைக்கின்ற விதைத்தான் முளைக்கும். வளர்ந்து அதன் குணத்தை காட்டாமல் போகாது. பாவம் பூமி அது என்ன செய்யும். விதைக்கும் போதே நல்ல விதையை விதைத்தால் நல்லது. எது நல்லவிதை என்பது எப்படித்தெரியும் என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். நல்லவர்கள் அந்த விதையைச் சொல்வார்கள். ஆனால் நாம் தான் கேட்கமாட்டோமே ! ஆதாரங்கள் கேட்ப்போம். எனவே விதை வளர்ந்த பின்னாவது அதன் குணத்தை வைத்தே தீர்மானிக்க வேண்டியது தானே ! நல்லவனாக வாழ்வதற்கும் திறமை வேண்டும். அப்பொழுதுதான் அமைதி நிலைக்கும், நம்மிலும் சுற்றிலும்.
ReplyDeleteEhil THANNA THAUHITHIN nilai padu enna urupadum namma uoor
ReplyDeleteஇரு தரப்பிலும் உள்ள மார்க்கம் கற்ற மேதைகள் இந்தக் கட்டுரையின் அடிப்படை நோக்கத்தையும் நியாயத்தையும் தயவுசெய்து களங்கப் படுத்தாமல் – காரணம் கற்பிக்காமல் குறிப்பிட்ட நிகழ்வை மனம் ஒத்து இரத்து செய்தால் அந்தச் செயல் ஊரார் பலருக்கு மகிழ்வைத்தரும்.
ReplyDeleteVery very useful article.
ReplyDeleteBoth parties should think and avoid such a useless debate for the sake of Allah.
Thanks to Adirai news for a nice article. Keep it up.
முன்பு ஜெக்கரியா தியேட்டர் இன்று திருமண மண்டபம் நல்ல இடத்தை தான் தேர்வு செய்து இருக்கிறார்கள் இருந்தாலும் ரோட்டில் போகின்ற பேருந்து, மாடு சப்தம் , குடிமகன்களின் தாலாட்டு, இவைகளால் இவர்கள் பேச்சு வெளிவராது.
ReplyDeleteபொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் நம்ம ஊர் கடல் ஓரமா மேடை போட்டு வாய் கிழிய பேசிட்டு தோணில லங்கா போய்டுங்க - விட்டது சனியன் என்று மக்களும் நிம்மதியா இருப்பாங்க.
அமைப்புகள் ஊருக்கு நல்லது செய்து இருக்கிறார்கள் என்பதில் மறுப்பு இல்லை ஆனால் மார்க்க விசயத்தில் ஒருவர்க்கு ஒருவர் காரசாரமா பேசுவதை பொது மக்களால் பொறுத்துக்கொள்ள முடியாது, தொடருமானால் பொது நல வழக்கு சம்பந்த பட்டவர்கள் மீது போடப்படும்!!
இந்த கூட்டம்
ReplyDelete'நாங்கள் கேட்டுபோகின்றோம் பந்தயம் என்ன கட்டுகிறீர்கள் ' என்று யானை தனது தலையில் மண்ணை வாரி போடுவதுபோல் செயல்படும் கூட்டம் . நிச்சயமாக மார்க்கத்தை நன்கு விளங்கியோர் அதை திருத்தி தனக்கு சாதகமான கருத்துக்களை திணித்து மக்களை குழப்ப மாட்டார்கள் .
Evergal kodai kala paerchykku num kulanthaigaley anupakkoodthu sariyana padam pkuthanum
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் முதலில் எந்த ஒரு கொள்கையும் மார்க்கத்திற்க்கு எதிராக இருந்தால் அதை கலை எடுப்பது மார்க்கம் அறிந்த ஒவொவொரு மூமீனுக்கும் கடமை அந்த அடிப்படையில் நீங்கள் பல பிரட்சனைகளை பட்டியல் போட்டீர்கள் அதோடு மார்க்கத்திற்கு எதிரான கொள்கையை பரப்பும் முஸ்லிம்கள் நமதூரில் இருக்கிறார்கள் என்று உங்கள் லிஸ்டில் சேர்த்துகொள்ளுங்கள் . இப்போது விசயத்திற்க்கு வருவோம் , இருதரப்பும் தௌஹீத் போர்வையில் இருப்பதால் தானே நீங்கள் கட்டுரை போடுகிறீர்கள் ஒரு குரூப் இணைவைத்தாழிலில் இருந்தால் என்ன செய்யவேண்டும் என்று உங்கள் இணையதளத்தில் கட்டுரை போடுங்கள், அப்போது ஒற்றுமை குலையாதா அதை இனம் காட்டுவது மூமின்களுக்கு கடமை இல்லையா ,
ReplyDeleteஅப்படி இனம்காட்டும் போது இரு காஃபிர்கல் மேற்கூறியதுபோல் பேசிக்கொள்ள மாட்டார்களா ? என்ன சொல்ல வருகிறீர்கள் இந்த கட்டுரை மூலமாக ?
அல்லது இருமதத்தினார்கள் இதுபோன்று விவாதாம் பண்ணலாமா யார் கொள்கையற்றவர்கள் என்று ? அப்போது மனித சமுதாயம் சன்டை இட்டுக்கொள்ளலாமா என்று யாராவது இது போன்ற மடத்தனமான கட்டுரை போடுவார் அப்போது இது போன்று வாழ்த்துவீர்களா நல்ல கட்டுரை என்று ? சரி எது தவறு எது என்று அறிவை பயன்படுத்தி சரியான மார்க்கத்திற்க்கு உட்பட்ட கொள்கையை தேர்வு செய்வீர்களா ? சிந்தித்து கட்டுரை போடுங்கள் .அஸ்ஸலமுஅளைக்கும்
You are right
Deleteமுதலில் ஓரு விசயம் புறிதல் அவசியம் காரணம் இனி துதா்கள் வரபோவதில்லை அல்லாஹ்வின் துதா் இருந்தால்விவாதங்கள் நடக்காது நாம் அனைவரும் துதா் சொல்படி நடக்கலாம் இப்போது அந்த நிலையில் இல்லை நமது ஊரில் ஓருகாலத்தில் வெள்ளிகிழமை இரவில் தர்கவில் தங்க மக்கள் எவ்வளவு உங்களுக்கு தெறிந்துயிருக்கும் என்று நம்புகிறேன் வரதட்சணை கொடுமைகள் மனித வழிபாடு[மொவுலான] கத்தம் பாத்திய [திதீ] இதில் கொடுமையான விசயம் என்ன என்றால் பெண்களை முடபழக்களிலிருந்து வெளிவராவிடாமல் மிஹ கவணமாக பாா்த்துகொண்ட உலமாக்கள் ஆண்களுக்கு பள்ளவாசலும் பெண்களுக்கு தர்கவும் எண்றும் பிரித்து சட்டம் போட்ட பள்ளி நிர்வாகம் இதற்கான விளக்கங்கள் எப்படி கிடைத்தது கேள்விகள்/விவாதங்கள்/ முலமாக தெளிவு கிடைத்தது இதை யாரும் மறுக்கமுடியாது அதிரை என்ற பெயரில் எத்தனை இணையதள பத்திரிகை நடத்தப்படுகிறது இவர்களிடம் ஒற்றுமையில்லை பத்திரிகை மாா்க்க தெரிந்தால் போடவும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்
ReplyDeleteசரியா சொன்னீர்கள் ஜாஃபருல்லா காகா
ReplyDeleteஉண்மை வெளிவர ஆரோக்கிய விவாதம் அவசியம். தவ்ஹீத் போர்வையில் என்ன செய்தாலும் விட்டுக்கொடுத்துபோதல் என்பது நம் மார்க்கத்திற்கு அழகல்ல. காரணம் உண்மை அறியாமலே விட்டில்பூச்சிகளாய் இளைஞர்கள் போய் விழுவது தடுக்கப்படும். தனித்தனியாய் அறிக்கைபோர் நடத்தும்போது குழப்பம் ஏற்படுமே தவிர உண்மை புலப்படாது அதேநேரம் நேருக்குநேர் விவாதம் என்பது சில உண்மைகள் வெளிக்கொணர உதவும், அதன் மூலம் மக்களுக்கு புரிதல் ஏற்படும். மாற்று மதத்தினர் என்ன பேசினாலும் கவலைபட தேவையில்லை. அவர்களுக்காக நாம் வாழவில்லை. நம் நோக்கம் சிறந்த உண்மையான கொள்கை அதில் உறுதி. அதுமட்டுமே. இந்த உலகத்தில் உள்ள அதிரை பிரச்சனையை அடுக்கும் நீங்கள் மறுமைக்கான அதிரை பிரச்சனையை நீங்கள்அடுக்காததிலிருந்தே தெரிகிறது உங்களின் உலக ஒற்றுமை..!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும். அன்புச் சகோதரர்களே ஒன்றை மட்டும் நாம் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஓரிறைக் கொள்கையில் உறுதியானவர்களே.! அப்படியானால் நமது ஈமானிலும் பலகீனமில்லாமல் இருக்க வேண்டும். அறியாத மார்க்க விசயங்களை மார்க்கத்தை தெளிவாக அறிந்தோரிடம் கேட்டு அறிந்து கொள்ளுதல் வாதிடுதல் தவறில்லை . ஆனால் நமக்குள் சமீபகாலமாக நடக்கும் சம்பவங்கள் அப்படித் தெரியவில்லை. இன்று பலபிரிவுகளாக சிதறுண்டு கிடக்கும் இஸ்லாமிய அமைப்புக்கள் மார்க்க விசயத்தில் முரண்பட்டு பிரியவில்லை..தனது சுயனலத்திற்க்காகவும், நீயா நானா என்கிற ஆளுமை போட்டியிலும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமல் ஏற்ப்பட்ட பகைமையிலும் தான் பிரிந்து கிடக்கிறார்கள். அதைவெலிக்காட்டிக் கொள்ளாமல் மார்க்கத்தில் ஒருவரைஒருவர் முரண்பட்டுப் பேசுவதாக வசைபாடிக்கொண்டு மேலும் நமக்குள் பகையை வளர்த்துக் கொள்வது வேதனையளிக்கக் கூடியதாக உள்ளது.
ReplyDeleteஇந்த ஒப்பந்தமானது தன் பல்லைக் குத்தி தானே முகர்ந்து கொள்வதுபோலவே செய்து கொள்ளும் ஒப்பந்தமாகும்.
மாற்று மதச் சகோதரர்கள் பெரும்பாலோனோர் இஸ்லாத்தின் மார்க்கக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவிக் கொண்டு வந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நமக்குள் இத்தகைய ஒப்பந்தம்,போட்டிகள் தேவைதானா ..? என்பதே எனது கருத்தாக பதிகிறேன்..
அதிரை.மெய்சா அவா்களின் இந்த வாதம் எணக்கு கவழை அளிக்கிறது பல்லைக் குத்தி அதில்யுள்ள களிவுகளை நீக்க எவ்வளவு கவணம் செலுத்துவோம் அதவிட அதிகம் கவணம் உலமாக்களுக்கு தேவை யாருடைய உள்ளத்தில் நிங்களோ நாணோ அறியமுடியாது
DeleteReplyDelete
அதிரை.மெய்சா அவா்களின் இந்த வாதம் எணக்கு கவழை அளிக்கிறது பல்லைக் குத்தி அதில்யுள்ள களிவுகளை நீக்க எவ்வளவு கவணம் செலுத்துவோம் அதவிட அதிகம் கவணம் உலமாக்களுக்கு தேவை யாருடைய உள்ளத்தில் நிங்களோ நாணோ அறியமுடியாது
ReplyDeleteவிவாதம் தேவையா தேவை இல்லையா என்பதற்குக் கூட விவாதம் தேவைபடுகிறது அல்லவா? ஒரு பொருளைப் பற்றி விவாதிப்பது அதன் பிறகு அதில் ஏற்படும் முடிவுகளை ஏற்பது என்கிற சித்தாந்தம் வரவேற்கத் தக்கதுதான். ஆனால் இந்த விவாதத்தின் தலைப்பு என்ன யார் கொள்கையற்றவர்கள் என்பதே தலைப்பு? இஸ்லாத்தில் கொள்கை என்பது என்ன ? அல்லாஹ்வுக்கும் அவனது இரசூளுக்கும் ஈமான் கொள்வதே கொள்கை அல்லவா? அப்படியானால் இதில் பங்கேற்கும் இரு தரப்பில் ஒரு தரப்பு அடுத்த தரப்பின் ஈமானைத்தானே கேள்வி கேட்கும்? இது போன்ற ஒரு விவாதம் வைத்துத்தான் ஆகவேனுமானால் ஒரு பள்ளியில் சில உலமாக்களுக்கு மத்தியில் ஒரு கலந்துரையாடலாக - அதாவது பகைமை உணர்வு இல்லாமல்- உண்மையை விளங்க வேண்டும் என்ற இறை அச்சத்தோடு விவாதித்தால் அதன் பிறகு உலமாக்களின் முடிவுக்கு கட்டுப் பட்டால் அது ஒரு வகையில் ஏற்புடையதாக இருக்கும். இது ஏதோ குளத்தில் நீச்சல் அடிக்கும் பொது இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீ முதலில் போகிறாயா அல்லது நான் முதலில் போகிறேனா என்கிற வகையில் அவரவரின் பலத்தை சோதிக்கிற விவாதமாகவே தோன்றுகிறது.
ReplyDeleteஇந்த விவாதம் ஏற்பாடு செய்யபட்டிருப்பதன் நோக்கம் உண்மைகளை உணர்வதற்காக அல்ல. ஒருவரை ஒருவர் சில சாட்சிகளை வைத்துக் கொண்டு தாக்கிப் பேசி மனங்களைப் புண்படுத்த அல்லது இன்னும் பகைமையை மற்றும் ஈகோவை வளர்க்க. மறுமை பற்றிய கவலைகளை இந்தக் கட்டுரையில் ஆசிரியர் பட்டியல் இடவில்லை என்பதும் சரிதான். ஆனால் இந்தக் கட்டுரையின் தலைப்பு மற்றும் சாராம்சமே மறுமைக்கான ஒரு கவலைதான் என்று நான் நினைக்கிறேன். சமுதா யத்துக்கான ஒரு கவலைதான் என்றும் நினைக்கிறேன். இப்படி முஷ்டி மடக்கிக் கொண்டு வரவேண்டிய நிலைக்கு இந்த சமுதாயம் தள்ளபட்டுவிட்டதே என்று கவலையுறும் பலபேர்களில் ஒருவன்.
//ஒருவர் கொண்டுள்ள கருத்தை அடுத்தவர் மீது திணிக்கவே முயலுவார்கள் என்பதும் இதனால் ஏற்கனவே சீர்கெட்டுப் போயிருக்கிற இரு தரப்பு உறவுகள் மேலும் சீர்கெடும் என்பதும்தான் நாம் உடனடி விளைவாகக் காண்பதாகும். //
ReplyDeleteஇது போன்ற அறிவுரைகள்படி நடக்க இப்பொழுது மனிதர்களை தேட வேண்டியுள்ளது. ஆதாரம் இருந்தால் கேட்டு நடக்கலாம்.
//கொள்கையற்றவர்கள் யார் ? //
சரியானாத் தலைப்பு. விளக்கம் கேட்க வேண்டியவர்களிடம் கேட்காமல் தவறிப்போன இச்சமுதாயம் இலகுவாகா பாதைகள் போட்டதில் நடந்து பழைய ஒற்றுமைகள் இழந்து போனதால் புதுமையில் இன்பம் கண்டு இன்பத்தில் திளைக்கவே ஆசைப்படுகிறது. இன்பம் என்பது அமைதி என்பது கசக்கத்தான் செய்யும். தனித்தனி பிரிவுகளில் பழகிவிட்டது. இன்னும் பலப் பிரிவாகவே பிரிந்து சென்றுவிடுதலை தடுக்க நல்ல கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆதாரம் இருந்தால் கேட்டு நடக்கலாம். பழைய அதிரை நினைத்தாலே இனிக்கிறது.
//ஒப்பந்தமாம் ! ஒப்பந்தம் ! சமுதாயத்தின் மானத்தை விற்கும் ஒப்பந்தம் !?//
இப்படித் தலைப்பு இட்டு நல்ல மனிதர்கள் வேதனையை காட்டுவதுதான் பலனாக இருக்கும். மாற்றம் வரப்போவதில்லை.
நியா ? நானா ? எது போனாலும் போகட்டும் ! உன்னை நான் என்பக்கம் இழுத்து மாற்றிவிடுகிறேன் பார் ! ஒற்றுமை என்னும் கயிறு இருக்கிறது ! என்று பிரிந்து பிரிந்து போவதைத் தவிர வேறு இலாபம் அடையப் போவதில்லை. இதிலிருந்து ஒரு புதுப் பிரிவு வந்தாலும் ஆச்சிரியப்பட வேண்டியதில்லை !
//நாங்கள் கெட்டுபோகின்றோம் பந்தயம் என்ன கட்டுகிறீர்கள் ' என்று யானை தனது தலையில் மண்ணை வாரி போடுவதுபோல் செயல்படும் கூட்டம் . நிச்சயமாக மார்க்கத்தை நன்கு விளங்கியோர் அதை திருத்தி தனக்கு சாதகமான கருத்துக்களை திணித்து மக்களை குழப்ப மாட்டார்கள் .//
இந்தமாதரி உண்மைகளை எழுத, செவிமடுத்துக் கேட்க ஆட்கள் இல்லை. கொஞ்சம் உப்பு உரப்பு வைத்து எழுதினால் கேட்டு பிரிந்து போகும் மார்க்கத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றக் காலம் இது.
//அமைப்புகள் ஊருக்கு நல்லது செய்து இருக்கிறார்கள் என்பதில் மறுப்பு இல்லை ஆனால் மார்க்க விசயத்தில் ஒருவர்க்கு ஒருவர் காரசாரமா பேசுவதை பொது மக்களால் பொறுத்துக்கொள்ள முடியாது, //
வேறு வழியில்லை ! நல்லது செய்தது மனதைப் பிடிக்க, அதன் மூலம் அவர்களின் மார்க்கங்களை பின்பற்ற. பொறுத்துப் போனதாலே இந்த நிலைக்கு போய்விட்டது. எனவே இன்னும் பொறுத்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை !
//சரியான பதிவு இது. என்னத்தசொல்ல...இவங்க எல்லோரும் குண்டாஞ்சட்டியிலெ குதிரை ஓட்டுபவர்கள்தான்.//
காலம் சென்ற கருத்து வெளிப்பாடு. சரித்திரமாகத்தான் போகும்.
//சிந்தித்து கட்டுரை போடுங்கள் .அஸ்ஸலமுஅளைக்கும்//
சிந்தித்து சிந்தித்து வேதனைப்பட்டு எழுதிய நல்லக் கட்டுரை. ஊர் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற வேதனையில் எழுதிய கட்டுரை. இதுபோன்ற கட்டுரைகள் இருபது வருடத்திற்கு முன்பே வந்திருந்தால் நன்னா இருக்கும். அதனால் இப்பொழுது வந்ததால் சிந்தித்து கட்டுரை போடுங்கள் என்றுதான் எழுதுவார்கள். சிந்தனையின் பாதை இலகுவான புதுமையில் சென்றுவிட்டது.
//எது எப்படியோ விவாதம் அமைதியான முறையில் நடந்தால் சரி.//
இதை எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை !
//பத்திரிகை மார்க்கம் தெரிந்தால் போடவும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்//
இஸ்லாம் மார்க்கம் தெரிந்ததால் அமைதி, ஒற்றுமை வேண்டும் என்று இப்படிப்பட்ட கட்டுரைகள் போடுகிறார்கள். நாம் தான் மதிப்பதில்லையே ! அவ்வாறே பழகிவிட்டோமே !
//மறுமைக்கான அதிரை பிரச்சனையை நீங்கள்அடுக்காததிலிருந்தே தெரிகிறது உங்களின் உலக ஒற்றுமை..!//
இப்படிச் சொல்லியே பிரிவினைகள் வளர்ந்து விட்டது. நான் சொல்வதுதான் சரி ! நீ சொல்வதில் நான் சிந்திக்கவே மாட்டேன். அப்படியே சிந்தித்தால் அதை முறியடிக்கும் விதத்தில்தான் சிந்திப்பேன் என்று வாதம் இளமையில் ஏற்படுவதும் இயற்கையோ ?
//மாற்று மதச் சகோதரர்கள் பெரும்பாலோனோர் இஸ்லாத்தின் மார்க்கக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவிக் கொண்டு வந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில்// வில்லிலிருந்து அம்பு போகும் வேகத்தில் விலகுவது நியாயமா ? என்று ஆலிம்கள் ஹதீஸ் கேட்டது நினைவுக்கு வந்து என்ன பயன் !
//இருதரப்பு இணைய தளங்களிலும் பதில் சொல்ல முடியாமல் ஓட்டமெடுத்தார் என்று விவாதத்தில் பங்கேற்றவரின் பெயரைப் போட்டு கேவலப்படுத்துவதைத்தவிர வேறு என்ன நடக்கப் போகிறது ?//
இதுதான் நடக்கும்.
வேதனையை இப்படித்தான் பகிர்ந்து கொள்ளமுடியும்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்!ஐய்யா கி வீரமணி அவர்களுக்கு கடிதம்!!
ReplyDeletehttp://kadithams.blogspot.com/2014/09/blog-post_20.html
ஒரு நீண்டநாள் மாற்றுமத அன்பர். கிருத்தவ சமயத்தை சார்ந்தவர். பெற்றோரால் மதபோதகருக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டவர். தன் சொந்த மதத்தின் மூட நம்பிக்கைகளால் வெறுத்து இறை நம்பிக்கை எதுவுமில்லாமல் வெளிப்படையாக மதங்களின்(மத நம்பிக்கையாளர்களிடையே உள்ள) மூட பழக்க வழக்கங்களை தன் மதம் உட்பட விமர்சிப்பார். இவர் ஒரு மென் பொறியாளர். சவுதியில் ஒரு கம்பெனியில் நல்ல பதவியில் இருக்கிறார். சமய நம்பிக்கை இல்லாவிட்டாலும் இறை தேடல் உள்ளவர். இலக்கில்லாத இறை நம்பிக்கையால் தன் திருமணத்தை கூட தள்ளிப் போட்டவர்.
ReplyDeleteஒரு சில நண்பர்களின் உதவியோடு பல வருடங்கள் தொடர்ந்த தாவத்தின் பேரில் இவர் இஸ்லாத்தின் பால் நெறுங்கி வந்தார். நோன்பு நோற்க தொடங்கினார். பெருநாள் தொழுகையில் தொடங்கி ஜும்மா தொழுகைக்கு கூட வரத்தொடங்கினார்.
கூடியவிரைவில் இவர் இஸ்லாத்தில் நுழைந்து விடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உறுதியாக இருந்தது. சில கால இடைவெளியில் இடமாற்றத்தில் அவரது தொடர்பு அற்றுப் போனது. எங்களுடன் பயணித் கோணத்தில் அவர் தொடர்ந்து பயணித்தால் நிச்சயம் அவர் இஸ்லாத்தில் இணைந்திருப்பார்.
சமீபத்தில் அவரை மணைவி குழந்தைகளுடன் சந்தித்தேன். அவர் இன்னும் கிருத்தவராகவே இருந்தார். அவரது தேடல் முடிந்து விட்டதா என்று கேட்டேன். அவர் கூறினார் நான் தேடுவதை நிறுத்தி விட்டு உள்ளது உள்ளபடியே வாழத்தொடங்கி விட்டேன். நான் கேட்டேன் உங்களை இஸ்லாம் ஈர்க்கவில்லையா என்று.
ஆளாளுக்கு இதுதான் இஸ்லாம் என்று சொல்கிறீர்கள். முதலில் எது உண்மையான இஸ்லாம் என்று நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள். அப்புறம் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்.
இந்த இயக்கங்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.
நெத்தியடி, மதத்தின் பெயரை வைத்து வியாபாரம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள், திருந்தவேண்டியது இவர்களெல்ல, பொது மக்கள் தான், பொதுமக்கள் தங்கள் பணத்தை ( ஜக்காத் ,பித்ரா, குர்பானி, நன்கொடை வசூல், கைதிகளை வெளிக்கொண்டு வருகிறோம் என்று வசூல் வேட்டை, இப்படி ஏராளம் ....) + ஆதரவு கொடுப்பதால் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்.
Delete
ReplyDelete//இருதரப்பு இணைய தளங்களிலும் பதில் சொல்ல முடியாமல் ஓட்டமெடுத்தார் என்று விவாதத்தில் பங்கேற்றவரின் பெயரைப் போட்டு கேவலப்படுத்துவதைத்தவிர வேறு என்ன நடக்கப் போகிறது ?//
இதுதான் நடக்கும்.
வேதனையை இப்படித்தான் பகிர்ந்து கொள்ளமுடியும்.
முத்துவாப்பவும் மச்தாங்கனியும் மிக சரியாக சொன்னார்கள். பாராட்டுகிறேன்.
ReplyDeleteமஸ்த்தான் கனி அவர்கள் எழுதியது சிந்திக்க வேண்டியதே.
ReplyDeleteதிருமண மண்டபத்திற்கு 4நாள் வாடகை, ஒலிபெருக்கி செலவு இது அல்லாமல் பல உபசரிப்பு செலவுகள் இப்படி கணக்கு போட்டால் கணிசமாக ஒரு பெரும் செலவு ஏற்படும். 1 அல்லது 2 வரலாம் .இதற்கெல்லாம் சொந்தமாக கஷ்டப்பட்டு சேகரித்த பணத்தை செலவு செய்ய யாருக்கு மனம் வரும் ? இலகுவாக மக்களிடம் வசூல் பண்ணித்தான் செய்ய முடியும். வரும் பெருநாளில் கிடைக்கபோகும் பணத்திற்கு செலவோ அல்லது வெளிநாடு அன்பர்கள் அச்செலவை தாங்கிக்கொள்வார்களோ.
மாற்று மதச் சகோதரர்கள் பெரும்பாலோனோர் இஸ்லாத்தின் மார்க்கக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவிக் கொண்டு வந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நமக்குள் இத்தகைய ஒப்பந்தம்,போட்டிகள் தேவைதானா
ReplyDelete'கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்களின் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும்' என்பதை தவறாக உபயோகிக்கும் சிலர் பதிவுக்கு தொடர்பில்லாத குறிப்பாக பிறர் முகம் சுளிக்கும் அளவிற்கு தனி மனித தாக்குதல் அடங்கிய வாசகங்களுடன் பின்னூட்டங்களை போலி முகவரியில் பதிந்து வருகின்றனர். இதுகுறித்து எங்கள் கவனத்திற்கு வந்தது. இவற்றை உடனடியாக கவனத்திற்கு எடுத்துக்கொண்ட நாம் அந்த குறிப்பிட்ட பின்னூட்டங்களை முன்னறிவிப்பின்றி நீக்கம் செய்துள்ளோம்.
ReplyDeleteமேலும் இந்த பதிவிற்காக மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்பட்டு வந்த வாசகர் பின்னூட்ட வசதி தற்போது நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த பதிவு தொடர்பான பின்னூட்டங்களை அளிக்க விரும்புவோர் அதிரை நியூஸ் தளத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு [ editoradirainews@gmail.com ] அனுப்பித்தந்தால் குழுவினரின் பரிசீலனைக்கு பிறகு வெளியிடப்படும்.
நன்றி !