ஜெயலலிதா பதவி இழந்துள்ளதால் அடுத்து புதிய முதல்–மந்திரி தேர்வு செய்யப்பட வேண்டும். இதனால் புதிய முதல்–மந்திரியாக யாரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த தடவை 2001–ம் ஆண்டு ஜெயலலிதா முதல்– மந்திரி பதவியில் இருந்து விலக நேரிட்ட போது ஓ.பன்னீர்செல்வம் முதல்– அமைச்சராக பதவி ஏற்றார். மீண்டும் அவர் முதல்வர் ஆகக் கூடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அடுத்த முதல்–அமைச்சராக தேர்வு செய்யப்பட 4 பேருக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாலாட்சி நெடுஞ்செழியன், முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் ஆகியோரது பெயர்கள் பேசப்படுகிறது.
இவர்கள் தவிர முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர்களும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்றிரவு தெரியவரும்.
நன்றி : மாலை மலர்
உயர்பதவியில் இருப்போற்கு இது போன்ற நீதி துறை தீர்ப்புக்கள் நாட்டின் சட்ட ஒழுங்கு கருதி அவைகள் முன்கூட்டியே அறிவிக்கப்படும் மேலும் அவற்றிக்கான மாற்று ஏற்பாடுகளும் செய்துகொள்ளும்படி சிபாரிசுகளும் செய்யப்படும் காரணம் இவர்கள் மக்கள் பிரதிநித்துவம் பெற்று இருப்பதால்.........
ReplyDeleteஇதுபோன்ற முந்தைய சூழலை எதிர்கொண்ட செல்வி ஜெயலலிதா அவர்கள் அப்போதைய சசிகலா குடும்பத்தாரின் தயவு தேவைப்பட்டதால் அப்போது ஓ.பன்னீர் செல்வம் நிர்பந்தத்தின் பெயரில் முதல்வராக்கபட்டார் ஆனால் தற்போது மீண்டும் அவருக்கு அந்த பதவி கிடைக்காது என்பது என்னுடைய கருத்து ........அப்படியே மேலும் அவரே மீண்டும் முதல்வர் என அறிவிக்கபட்டால் ஜெயலலிதா இன்னும் அந்த குடும்பத்தின் கட்டுக்குள்ளே இருக்கின்றார் என்பதும் என்னுடைய கருத்து .
மறு தேர்தல் வரும்வரை, ஆளுநர் ஆட்சியே நல்லது.
ReplyDelete