.

Pages

Saturday, September 27, 2014

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு !

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது 1991 முதல் 96ல் முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக ( ரூ. 66 கோடி ) வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகாலம் நடந்த வழக்கில் இன்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட தீட்டப்பட்ட சதி இந்த வழக்கு என்றும், தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், குறைந்த அளவு தண்டனை வழங்குமாறும் சிறப்பு கோர்ட் நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹாவிடம் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., குற்றவாளி என பெங்களூரூ சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளதை அடுத்து கோவை, கடலூர், மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெ., வழக்கு தீர்ப்பு காரணமாக, கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image Credit : Dinakaran

3 comments:

  1. அம்மாவின் மீதான தீர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், அப்படியே தமிழகத்தின் மிக பணக்கார கொள்ளை குடும்ப கூட்டத்தின் மீதும், நல்லவர் வல்லவர் சுப்பிரமணியம் சாமீ வழக்கு தொடர்ந்து, அதையும் டி'குன்ஹாவே விசாரணை செய்து ஒரு நல்ல தீர்ப்பு சொல்லட்டும்

    காலம் தாழ்ந்தாலும் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஊழல் செய்யும் ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் இதுபோன்ற தண்டனைகள் அளிப்பதன் மூலம் நீதி இன்னும் மரணிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. உயர்பதவியில் இருப்போற்கு இது போன்ற நீதி துறை தீர்ப்புக்கள் நாட்டின் சட்ட ஒழுங்கு கருதி அவைகள் முன்கூட்டியே அறிவிக்கப்படும் மேலும் அவற்றிக்கான மாற்று ஏற்பாடுகளும் செய்துகொள்ளும்படி சிபாரிசுகளும் செய்யப்படும் காரணம் இவர்கள் மக்கள் பிரதிநித்துவம் பெற்று இருப்பதால்.........

    இதுபோன்ற முந்தைய சூழலை எதிர்கொண்ட செல்வி ஜெயலலிதா அவர்கள் அப்போதைய சசிகலா குடும்பத்தாரின் தயவு தேவைப்பட்டதால் அப்போது ஓ.பன்னீர் செல்வம் நிர்பந்தத்தின் பெயரில் முதல்வராக்கபட்டார் ஆனால் தற்போது மீண்டும் அவருக்கு அந்த பதவி கிடைக்காது என்பது என்னுடைய கருத்து ........அப்படியே மேலும் அவரே மீண்டும் முதல்வர் என அறிவிக்கபட்டால் ஜெயலலிதா இன்னும் அந்த குடும்பத்தின் கட்டுக்குள்ளே இருக்கின்றார் என்பதும் என்னுடைய கருத்து

    ReplyDelete
  3. மற்றவங்களுக்கு குடும்பம் கோத்திரம் பிச்சுலங்கள் இருக்கின்றது, ஆதலால் ‎அவர்க்குள் ஊழல் செய்து சொத்துக்களை சேர்க்கின்றனர், சேர்த்தவர் ‎மண்டையை போட்டாலும் சேர்த்த சொத்துக்கு பங்கு போட வாரிசு முறையில் ‎ஆட்கள் உண்டு.‎

    இந்த ஜெயலலிதாவுக்கு வாரிசு யாரும் இல்லையே, அப்புறம் எதுக்கு இந்த ‎அம்மா இப்படி ஆசைபடனும்?. இவ்வளவு ராஜ தந்திரியாக இருந்தும் இப்படி ‎கோட்டை விட்டது, ஆனைக்கும் அடிசறுக்கும் என்ற பழமொழி ‎பொய்க்கவில்லை என்றுதானே அர்த்தம். ‎

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.