.

Pages

Saturday, September 20, 2014

அதிரை அருகே உள்ள அணையில் குளித்து மகிழும் இளைஞர் பட்டாளங்கள் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தொக்காலிக்காடு கிராம். விவசாய கிராமமான இங்கு பெரும்பாலானோரின் தொழிலாக தென்னை மற்றும் தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பச்சை பசேல் என குளுமையுடன் காட்சியளிக்கும் இந்த கிராமத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடியது மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் நீர் ஆகும். இந்த நீரை எடுத்துதான் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே பயனைத்தரும். மற்ற நேரங்களில் இந்த அணை நீரின்றி வறண்டே காட்சியளிக்கும்.

எந்தவருடமும் இல்லாத அளவு இந்தவருடம் பொய்த்து போன மழையால் அதிரையில் உள்ள அனைத்து குளங்களும் நீரின்றி வறண்டு காணப்பட்டு வருகின்றன. அதிரையர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நீந்தி மகிழ்ந்த நமதூர் குளங்கள் இன்று நீரின்றி வற்றிப்போய் அழகு இழந்து அநாதரவாய் கிடக்கின்றன. இருக்கும் மற்ற சில குளங்களிலும் கழிவு நீர்கள் சூழ்ந்து காணப்படுவதால் தினமும் குளத்திற்கு சென்று குளித்து மகிழுவோருக்கு சற்று வேதனையை ஏற்படுத்திருக்கக்கூடும்.

அதிரையை சுற்றி இருக்கக்கூடிய சின்ன ஏரி, பெரிய ஏரி, ராஜாமடம் அணை ஆகிய நீர் நிலைகளை நாடிச்செல்வது இவர்களுக்கு வழக்கமான ஒன்றாக இருந்தாலும் தொக்காலிகாட்டில் உள்ள மஹாராஜ சமுத்திர அணையில் குளிப்பதற்கு ஏற்ற அமைப்பில் சற்று இலகுவாக அமைந்திருப்பதால் அதிகமானோர் விரும்பிச் செல்கின்றனர். குறிப்பிட்ட சில வாரங்களில் மாத்திரமே நீரைக்கொண்டுள்ள இந்த அணையில் வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக தாயகம் வரும் இளைஞர்களும், உள்ளூரில் வசிக்கும் இளைஞர்களும் ஆர்வத்துடன் இந்த அணைக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். தண்ணீர் வரத்து மிதமாக இருப்பதால் அதிகமான நேரம் குளித்து மகிழ்கின்றனர். பயணத்திற்காக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் இவர்கள் குளித்து முடித்தவுடன் காலை பசியாற அணையின் அருகில் உள்ள ஆழ மரத்தடியின் நிழலில் அமர்ந்து வாங்கிச் செல்லும் புரோட்டாவை  உண்டு மகிழ்கின்றனர். இங்கு சென்றுவர அதிகமாக வார விடுமுறை தினங்களை இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

செய்தி தொகுப்பு : அதிரை நியூஸ்
படங்கள் : எஸ். அப்துல் வாஹித் ( MMS ), எஸ்.எம். வாசிம்







3 comments:

  1. Adirai kulangalilum ipadi kulika aasai

    ReplyDelete
  2. wonderful seen........

    அன்புடன்

    மான். ஷேக்

    Human Rights
    Adirampattinam -614701

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.