.

Pages

Wednesday, September 17, 2014

அதிரையில் அதிசயம் ! வானில் சூரியனைச்சுற்றி ஒளிவட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை சுற்றுவட்டார பகுதிகளின் வானில் இன்று காலை 10.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை அதிசயமாக சூரியனை சுற்றி ஒளி வட்டம் தென்பட்டது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வானில் நிகழ்ந்த இந்த அதிசயத்தை பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து புவியியல் துறை வல்லுனர்கள் கூறுவது என்ன ?
வளிமண்டலம் 'டிரோபோஸ்பியர்', 'மீசோஸ்பியர்', 'எக்ஸ்சோஸ்பியர்', 'அயனோஸ்பியர்' எனும் நான்கு அடுக்குகளால் ஆனது. பூமியின் பரப்பிலிருந்து 12 கி.மீ., தூரம் வரை உள்ள 'டிரோபோஸ்பியர்' அடுக்கில் தான் வானியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. மழை மேகங்கள், காற்றுகளுக்கு இடையே அடர்த்தி மாறுபடுகிறது.

மழை, மேக மூட்டத்தின் போது ஏற்படும் வானவில் போன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள 'டிரோபோஸ்பியர்' அடுக்கில் 'ஒளி விலகல்' ஏற்பட்டு உள்ளது. நீர் ஆவியாதல் மூலம் மேலெழும்பி சென்று நீர்த்திவலைகளாக தேங்கி நிற்கிறது. பூமியிலிருந்து அதிக அளவில் வெப்பக் காற்று மேலெழும்போது இந்த நீர்த்திவலைகளுக்கும், வெப்பக்காற்றுக்கும் இடையே அடர்த்தி மாறுபாடு ஏற்படுகிறது. அடர்த்தி மாறுபாட்டின் போது நீர்த்திவலைகளின் மீது, சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் 22 டிகிரி கோணத்தில் படுகிறது. இதை 'சிர்கோ ஸ்ட்ரேடஸ்' என்கிறோம். அப்போது இதுபோன்ற 'ஒளி விலகல்' ஏற்படுகிறது. நீர்த் திவலைகள் அறுகோண வடிவில் இருப்பதால் வட்ட வடிவமாக தெரிகிறது என்பதாக கூறுகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள் : யாசின்





1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.