மழை காலங்களில் தெருவின் பல்வேறு பகுதியிலிருந்து தவழ்ந்து வரும் மழை நீரோடு கழிவு நீரும் இந்த குளத்தில்தான் இறுதியில் சங்கமிக்கும். மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாக பராமரிப்பில் இருந்து வரும் இந்த குளத்தை ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை குத்தகைக்கு விடுவது வாடிக்கை.
இந்நிலையில் குப்பை கழிவுகளால் சூழப்பட்டு சுகாதாரமற்று காணப்பட்ட புதுக்குளத்தை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு குப்பை கூளங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியன அப்புறப்படுத்தப்பட்டு குளத்தின் கரைகள் சரி செய்யப்பட்டது அப்பகுதியினரிடேயே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா மற்றும் கே.கே யூசுப்
அணைத்து முஹல்லா தலைவர் மற்றும் மேலத்தெரு தலைவர் MMS ஷேக் மாமா பனி வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.
ReplyDeleteதெருவுக்குள் இருக்கும் இந்தக் குளம் அனைவருக்கும் மிக அவசியமான குளம். இக்குளம் புதுப்பிக்கப் படுவதால் தெருவும் சுத்தமாகும். காலதாமதமாக யோசித்தாலும் செயல் பாட்டில் இறங்கி சீர்செய்ய களத்தில் இறங்கியது பாராட்டப் படவேண்டியதே.!
ReplyDeleteஆனால் இனியாரும் கழிவுகளையும் குப்பைகளையும் கொட்டவிடாமல் பராமரிக்க வேண்டும்.பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
பள்ளிவாசலுக்கு அருகில், குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இக்குளம் பாதுகாக்கப்பட வேண்டும். மீண்டும் இதனுள் சாக்கடை நீர்கள் வராமல், குளத்தில் ஆற்று நீரோ அல்லது மழை நீரோ வந்து விழும் படி நிர்வாகம் அமைத்தல் சுகாதாரம் நிலைக்கும், நீர்வளம் சிறக்கும். இது போன்ற செயல்கள் மூலம் நிர்வாகிகள் மனதாரப் போற்றப்படுவார்கள். குளத்தின் அகலமும் குறையாமல் பாதுகாக்க வேண்டும்.
ReplyDeleteசேவை ஒரு தீர்வாகவும் இருக்க வேண்டும் சாக்கடை பாதையை மாற்று வழியில் எடுத்து செல்வதே புதுக்குளத்திற்க்கு பாதுகாப்பு கூடுதலாக ஆல் குழாய் கிணறு புதுக்குளத்தின் தண்ணீர் தேவையை நிறைவேற்றும்.
ReplyDeleteஇக்குளம் பாதுகாக்கப்பட வேண்டும்
ReplyDeleteஇக்குளம் பாதுகாக்கப்பட வேண்டும்
ReplyDelete