.

Pages

Sunday, December 7, 2014

பெட்ரோமாக்ஸ் விளக்கை காட்டி நூதன மோசடி ! ஏமாற்றிய கும்பல் கைது !!

பேராவூரணி அருகே இரிடியம் இருப்பதாக பெட்ரோமாக்ஸ் விளக்கை காட்டி ஏமாற்றி மோசடி செய்ய முயன்ற கும்பலை திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
           
பழங்கால கோவில்களில் தாமிர கலசங்களில் இரிடியம் என்னும் விலை மதிப்பு மிக்க உலோகங்கள் கலந்து தயாரிக்கப்பட்டது. இது கோவில் கோபுரங்களை இடி தாக்காமல் காக்க பயன்பட்டுள்ளன. இரிடியம் சர்வதேச சந்தையில் கிலோ 50 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பு உடையது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பெட்ரோமாக்ஸ் விளக்குகளில் இரிடியம் இருப்பதாக நம்பப்படுகிறது.
           
இந்நிலையில் பேராவூரணியை அடுத்த ஆவணம் என்ற இடத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை காட்டி, நூறாண்டு பழமை வாய்ந்த பெட்ரோமாக்ஸ் விளக்கில்  இரிடியம் இருப்பதாகவும், இதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், நோய், நொடிகள் நெருங்காது. அதிர்ஷ்டம் தேடிவரும் என்று சொல்லி இரிடியம் உள்ள அபூர்வ விளக்கின் விலை 5 லட்சம் என்று கூறி, மோசடி கும்பல் ஏமாற்ற முயன்றதாம்.
               
அதே சமயத்தில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் பழனிசாமி, உதவி ஆய்வாளர் சின்னப்பா, காவலர்கள் ஆதிமூலம், மதிவாணன், பத்மநாதன், கணேசன் உள்ளிட்ட குழுவினர் மோசடி கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
             
கும்பலில் சிவகங்கை, திருமயம், மணமேல்குடி, பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கிருபாகரன்( வயது 27), ஷாஜகான்(37), மணிகண்டன்(28), இளங்கோவன்( 32), மகாலிங்கம்(53), பக்ருத்தீன்(37), ரெங்கசாமி(60), ராமையன்( 52), முருகேசன்(65), மணிமாறன்( 32) உள்ளிட்ட பத்து பேரையும் கைதுசெய்து, அவர்கள் வந்த வாகனத்தையும், பெட்ரோமாக்ஸ் விளக்கையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி மற்றும் படம்:
எஸ்.ஜகுபர் அலி, பேராவூரணி

2 comments:

  1. யாமாருபவன் இருக்கும் வரை மோசடிக்காரன் அவன் செயலை காட்டிக்கொண்டு தான் இருப்பான், மக்கள் தான் டிவி மோகத்தில் மூழ்கி இருக்காங்க, அவர்களை கவனித்து விட்டுவிடுவீங்கன்னு தெரியும்.

    இந்திய உணவு கழகமான எப்.சி.ஐ.,க்கு சொந்தமான, 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி மாயமாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது, இதில எந்த அரசியல்வாதி புண்ணியவான் இருக்கான்னு தெரியல, நாடு விளங்கிடும் போங்க.

    ReplyDelete
  2. இதில் நம்ம ஊரிலும் நிறைய ஆசாமிகள் உள்ளனர் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பெட்டமாக்ஸ் லைட்டுக்கு விலை ரூபாய் 20 - கோடி வரை சொல்லப்படுகறார்கள் அதை சோதிக்கும்முறை டேங்கில் தண்ணீரை நிரப்பி வெயிலில் வைத்தால் மூடிவழியாக உடனே வெளியேறுவதை பார்க்கலாம்மாம்.
    இதுமாதரி கையில் இருந்த மொதலை (பல லட்சங்களை) இழந்து கற்பனையாக பல கோடுகளுக்கு அதிபதியாகிவிடுவேன் என்று சொல்லி திரிபவர்களை நான் காணுகிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.