விப்ரோ 2014 மராத்தான் போட்டி இன்று காலை சென்னையில் தொடங்கியது. மூன்று விதமான போட்டிகளை கொண்ட இந்த மராத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றார்கள்.
10 கி.மீ தூரத்திற்கான மராத்தான் போட்டி நேப்பியர் பாலத்தில் தொடங்கி, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையாறு, மத்திய கைலாஷ் வழியாக தரமணியில் உள்ள சென்டரல் பாலிடெக்னிக் மைதானத்தில் நிறைவு பெறுகிறது. இதே போல் அரை மராத்தான் மற்றும் முழு மராத்தான் ஆகிய போட்டிகள் பறக்கும் ரெயில் நிலையம் அமைந்துள்ள கஸ்தூரிபாய் ரெயில் நிலையத்தில் துவங்கி தரமணி, சென்டரல் பாலிடெக்னிக் மைதானத்தில் நிறைவடைகிறது. இப்போட்டியில் மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள், வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்குபெற்று ஓடி வருகின்றனர்.
ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றவர்களை பட்டினப்பாக்கம் பகுதியில் வயதான தம்பதியர் கைதட்டி உற்சாகப்படுத்தினர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு உதவும் வகையில் பழச்சாறு, வாழைப்பழம் மற்றும் குடிநீர் ஆகியவை பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டன. இந்த மராத்தான் போட்டியையொட்டி போக்குவரத்து மாற்றத்தை செய்த காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

நன்றி: மாலைமலர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.