.

Pages

Sunday, December 7, 2014

மொபைலில் பாட்டு கேட்டபடி டிரைவிங் சென்ற வாலிபர் லாரியில் சிக்கி பலி !

மொபைலில் பாட்டு கேட்டபடி சென்றபோது சென்டர் மீடியனில் பைக் மோதி ரோட்டில் விழுந்த வாலிபர் மீது லாரி ஏறி நசுக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பைக் இரண்டு துண்டாக உடைந்து சிதறியது. திருவள்ளூர் அடுத்த எல்லம்மாகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் பாலமுருகன்(23). சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாலமுருகன் வேலை செய்தார். இரவு பணி முடிந்து இன்று அதிகாலை பைக்கில் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். அப்போது அவர் மொபைலில் பாட்டுக்கேட்டுக்கொண்டே பைக்கை ஓட்டிவந்து உள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் போளிவாக்கம் அருகே வந்தார். அப்போது சாலையின் ஒருபுறம் வைக்கப்பட்டுள்ள பேரிகார்ட் மீது பைக் மோதி சாலையில் விழுந்துள்ளார். அந்த சமயத்தில் எதிர் திசையில் படுவேகமாக வந்துகொண்டு இருந்த லாரி, பாலமுருகன் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பைக் துண்டு, துண்டாக நொறுங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர், லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். இந்த விபத்தை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். அந்த பகுதியில் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திய  லாரியை ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் பிடித்து, டிரைவரை கைது செய்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாலமுருகன் உடலை பிரேத பரிசோதனை செய்ய திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

நன்றி: தினகரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.