முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் மில்லினியம் மெட்ரிக்குலேசன் பள்ளியின் மாணவர்கள் மன்னார்குடியில் நடந்த தமிழ்நாடு சாய்வாங்டோ கழகம் நடத்திய 4வது மாநில அளவிலான 10 மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட கராத்தேப் போட்டியில் கலந்துக் கொண்டனர். இதில் 7-ம் வகுப்பு மாணவன் பவித்திரன் தங்கப்பதக்கமும், 7-ம் வகுப்பு மாணவன் சேக் ஹம்தான், 4-ம் வகுப்பு மாணவன் அபினேஷ், 6-ம் வகுப்பு மாணவி சுவாதி ஆகியோர் வெள்ளி பதக்கமும், 5-ம் வகுப்பு மாணவன் விமலன் வெண்கல பதக்கமும் பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது. எம்.எம்.எஸ்.அறக்கட்டளை தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கரிகாலன் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் அசரப் அலி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டி கௌரவ படுத்தப்பட்டது. இதில்; கராத்தே மாஸ்டர் சபீஷ,; பள்ளியின் முதல்வர் உதயா, துணை முதல்வர் அன்னப்பூரணி, உடற்கல்வி ஆசிரியை ராஜராஜேஸ்வரி மற்றும் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.