.

Pages

Friday, December 5, 2014

முத்துப்பேட்டை பட்டரைக்குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு !

முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் மிக பெரிய பரப்பளவில் பட்டரைக்குளம் ஒன்று உள்ளது. நகர மக்களுக்கு நீர் ஆதாரமாகவும், மக்கள் பயன்பாட்டில் ஒரு காலத்தில் இருந்த நிலையில் சில ஆண்டுகளாக சுற்றுப்புறப் பகுதியினர் குளத்தைச் சுற்றியிலும் ஆக்கிரமித்ததால் குளம் சுருங்கி குட்டையாக மாறியது. குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களையும் முழுமையாக தனியார் ஆக்கிரமித்ததால் குளத்திற்கு வரும் தண்ணீர் தடைப்பட்டு குளம் வரண்டு அப்பகுதியில் சாக்கடை குளமாக மாறியது. இந்த நிலையில் முற்றிலும் மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் போன இந்த குளத்தில் பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதிக்காக சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 27 லட்சம் செலவில் குளத்தைத் தூற்று தடுப்பு சுவர் கட்ட தீர்மாணித்து பணியைத் துவக்கியது. இதற்கு பொதுமக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி அந்த நிதியை மக்கள் பயன்பாட்டில் உள்ள வேறு குளத்திற்கு செவிட கோரிக்கை வைக்கப்பட்டது. இருந்தும் பணியைத் துவக்கிய பேரூராட்சி நிர்வாகம் மீறி குளத்தைத் தூற்று தொடர்ந்து பணி நடைபெற்று வந்தது. இதனை எதிர்த்து சமூக ஆர்வளர் முகம்மது மாலிக் என்பவர் இந்த குளத்தில் மதிப்பீட்டுக்கு முதலான 27 லட்சம் செவிட படுவதாகவும், இந்த பணி ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதி செய்து கொடுக்க பணி நடந்து வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த கோரியும,; செலவிடப்படும் ரூபாய் 27 லட்சத்தை அரசு பறிமுதல் செய்யக்கோரியும், நீர் ஆதாரத்தை கெடுக்கும் மற்ற அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றக் கோரியும் கடந்த 05.02.2014 அன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதி மன்ற முதல் பென்ச் நீதிபதி கடந்த 26.08.2014 அன்று பட்டரைக்;குளத்தின் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து டிசம்பர் 4-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை முற்றுலும் அகற்றி அதன் புகைப்பட நகல்களை கோர்ட்டில் பேரூராட்சி நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதனை இரண்டு மாதமாக அலட்சியம் காட்டிய பேரூராட்சி நிர்வாகம் கடந்த 03.11.2014 தேதியிட்ட நோட்டிஸ் தயார் செய்து 39 ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டிஸ் அனுப்பியது. இதனால் போதிய கால அவகாசம் இல்லாததால் ஆக்கிரமிப்பாளர்கள் மத்தியில் கடும் அதிர்ப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் தலைமையில் நில அளவை தாசில்தார் தேவராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் சித்தி விநாயகமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் முருகேசன், வி.ஏ.ஓகள் பாலமுருகன், தினேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமானுஜம், மகேஷ் பூபதி மற்றும் போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டனர். அப்பொழுது பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் முதலில் துப்புரவ பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு சில ஆக்கிரமிப்பை அகற்றினர். அதற்கு அப்பகுதியில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து திரும்பிய பணியாளர்கள் மதினா பள்ளி அருகில் உள்ள குடியிருப்புகளில் பின்பக்கம் இருந்த வேலிகளை அகற்றினர். அதிலும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் மீண்டும் துப்பரவு தொழிலாளர்கள் வீடுகள் பக்கம் வந்த அதிகாரிகள் காரணம் தெரிவிக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் திரும்பி சென்றனர். இதனால் முத்துப்பேட்டையில் பரபரப்பானது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.