.

Pages

Tuesday, December 2, 2014

அதிரையில் பொது சுகாதாரத்தை மேம்படுத்த நவீன குப்பை தொட்டி வாங்கப்படுமா ? ஆர்வலர்கள் கேள்வி !

அதிரையில் பொது சுகாதாரத்தை மேம்படுத்த நவீன குப்பை தொட்டிகள் வாங்கப்படுமா என அதிரைவாழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிரை பேரூராட்சியின் சார்பில் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டிகளும் பழுதடைந்து ஆங்காங்கே கேட்பாரற்று கிடக்கிறது. தற்போது அதிரையின் எந்தவொரு இடத்திலும் குப்பை தொட்டிகள் தென்படவில்லை. வீடு, கடைகளிலிருந்து வெளியேறும் குப்பைகள் முக்கிய பகுதிகளின் வீதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. இவற்றை வீதியில் சுற்றி திரியும் மாடுகளால் கிளறப்பட்டு ஆங்காங்கே சிதறி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சுகாதார பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆர்வலர் 'அபூ இஸ்ரா' நம்மிடம் கூறியதாவது...
'அதிரை நகரின் வீதிகளில் சிதறிகிடக்கும் குப்பை கழிவுகளால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிரை பேரூராட்சி நிர்வாகத்தினர் பொது சுகாதாரத்தை மேம்படுத்த நவீன குப்பை தொட்டிகள் வாங்கி அதிரையின் முக்கிய பகுதிகளில் நிரந்தரமாக வைக்கவேண்டும். தற்போது பல்வேறு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் இலகுவாக கையாளும் விதத்திலும், ஆடு மாடுகள் சீண்டாத வகையிலும், பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் நவீன குப்பை கொட்டும் சாதனங்களை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இவற்றை பராமரிப்பதில் எவ்வித சிரமமும் ஏற்படாது' என்றார்.

இதோ நவீன குப்பை தொட்டியின் படங்கள் சிலவற்றை நமது பார்வைக்கு அபூ இஸ்ரா தந்துள்ளார்.

2 comments:

  1. நல்லதொரு யோசனை, அதை இலகுவாக புகைப்படத்துடன் கான்பித்துவிட்டார் சகோ.அபூஇஸ்ரா.

    பிறகென்ன உடனே களப்பணியாற்றிட வேண்டியது தானே.

    இரண்டு பெட்டிகள் பத்தாது மூன்றாக வைத்தால் நன்று.

    ReplyDelete
  2. Navina kuppai thotti vaippatharkku mun adirai makkalakku kuppai kottum olungu muraikalai pattri.oru vardam vakuppu yeduththal nakarikamaka irukkum. Navina kuppai thottiyai vittu kuppai naluvamalum irukkum

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.