.

Pages

Tuesday, December 9, 2014

கத்தி குத்தில் இளம்பெண் படுகாயம் !

அதிரை அருகில் உள்ள கொள்ளுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேல். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி டயானா ( வயது 21). இதே பகுதியை சேர்ந்தவர்கள் சேவியர் ( வயது 31 ), லூத் சகாயம் ( வயது 29). உறவினர்களான இவர்கள் இருவருக்கும், சித்திரவேல் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களுக்கிடையே இன்று இரவு நடந்த தகராறில் சேவியர், சகாயம் இருவரும் சேர்ந்துகொண்டு டயானாவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் டயனாவிற்கு முதுகிலும், கழுத்து பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டது. உடனே அதிரை அரசு மருத்துவமனைக்கு தமுமுக ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் கொள்ளுக்காடு பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவியது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.