.

Pages

Wednesday, December 10, 2014

பட்டுக்கோட்டை விடுதியில் தங்கியிருந்த தேங்காய் வியாபாரி மாரடைப்பால் மரணம் !

பட்டுக்கோட்டை தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த தேங்காய் வியாபாரி செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள நெய்வினை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சி. வெங்கடேஷ் (45), எம். இளையபெருமாள் (42).

உறவினர்களான இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பட்டுக்கோட்டை சின்னையா தெருவிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் மாத வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர். பக்கத்து ஊரான துவரங்குறிச்சியில் இவர்களுக்குச் சொந்தமான தேங்காய் வாடி உள்ளது.

அங்கிருந்து சென்னை, பெங்களூர் நகரங்களுக்கு தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், டிச. 5-ம் தேதி இளையபெருமாள் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். வெங்கடேஷ் மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளார். ஊரிலிருந்து டிச. 7-ம் தேதியும், 8-ம் தேதியும் இளையபெருமாள் வெங்கடேஷுக்கு பல முறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் வெங்கடேஷ் போனை எடுக்கவில்லையாம். இதையடுத்து இளையபெருமாள் ஊரிலிருந்து செவ்வாய்க்கிழமை (டிச. 9) காலை பட்டுக்கோட்டை விடுதிக்கு வந்தார்.

அறைக் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் அவர் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் தங்கும் விடுதிக்குச் சென்று அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேஷ் படுக்கையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. டிச. 7-ம் தேதி இரவு அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.