சவுதி அரேபியாவில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக தொண்டுகள் பலவற்றை இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரம் பல வருடங்களாக செய்துவருகின்றது. தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துவைப்பது, ஆரேக்கியம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இந்தியாவின் சமகால நிகழ்வுகளின் பிரச்சினைகளையும் தீர்வுகளைவும் பற்றி விவாதிப்பது என பல்வேறுதளங்களில் சேவைகளை செய்துவருகின்றது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் இறையாண்மைக்கு தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வான பாபரி மஸ்ஜித் இடிப்பை நினைவு கூர்வதோடு அந்த இடிப்புக்குக் காரணமான குற்றவாளிகளை தண்டிக்கக் கோரியும் பொதுக்கூடங்கள் சவுதி அரேபியாவின் பல மாகாணங்களில் நடைபெற்றது.
மேற்கு மாகாணமான ஜித்தாவில் ஸரபிய்யா-இம்பாலா வெளியரங்கில் டிசம்பர் 5 ம் தேதி வெள்ளி மாலையில் இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரத்தின் மாகாண செயலாளர் அப்துல் மஜீத் அவர்கள் தலைமையில் ”என்றும் நம் நினைவில் பாபரி மஸ்ஜித்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக ஸ்டூடன்ஸ் ஃபெடர்னிட்டி போரத்தின் மாணவிகள் ”ஸாரேஜஹான்சே அச்சா” என்ற மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் வைரவரிகளை பாடி நிகழ்ச்சியினை ஆரம்பம்செய்தனர். அதனைத் தொடர்ந்து IFF ஜித்தா மாகாண கேரள பிரிவு தலைவர் சம்சுதீன் வரவேற்புரையாற்றினார்.
IFF ஜித்தா மாகாண டெல்லி பிரிவு தலைவர் இர்ஷாத் உர்து மொழியில் பாபரி பள்ளியின் இடிப்பு குறித்தும் அதனை மீண்டும் அதே இடத்தில் கட்டுவதின் அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
IFF ஜித்தா மாகாண செயலாளர் அப்துல் மஜீத் கன்னட மொழியில் பாபரி பள்ளியை இடித்தவர்களும் அதனைத் தொடர்ந்து கலவரங்களை நடத்திய கலவரக்காரர்களும் தாதாக்களும் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர். ஆனால் அப்பாவி மக்கள் மீது போலி என்கவுன்டர்கள் மூலம் சுட்டுக் கொல்லப்படுவதும், கலவரங்களில் தாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. இவர்களுக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் உண்மையான குற்றவாளிகள் மீது சட்டம் பாய மறுக்கின்றது. இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை. ஆனாலும் முஸ்லிம்கள் நீதித் துறையின் மீது நம்பிக்கை இழக்கவில்லை என ஆதாரங்களுடன் பட்டியலிட்டு காட்டினார்.
ஜித்தா மாகாண தமிழக பிரிவு தலைவர் மஹ்பூப் ஷரீப் தமிழ் மொழியில் சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில் 1949ம் ஆண்டு வரை முழுமையாக தொழுகை நடைபெற்ற பள்ளியில் பாசிசவாதிகள் இரவோடு இரவாக அத்துமீறி ராமர் சிலைகளை பள்ளியினுள் வைத்த சம்பவத்தை விளக்கியதுடன் பாபரி பள்ளியின் சுறுக்கமான வரலாற்றை மக்கள் மத்தியில் பதிவு செய்தார். மத்திய அரசின் வாக்குறுதியின் பிரகாரம் அதே இடத்தில் பள்ளியை கட்ட வேண்டும் என்று நாம் அனைவரும் உறுதிபூன வேண்டுமென அறிவுறுத்தினார். அத்தோடு ”முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும், எழுந்து நட எரிமலையும் உனக்கு வழிவிடும்” என்ற மூத்தோரின் வாக்கோடு போரட்ட குணத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து Social Forum ஜித்தா மாகாண தலைவர் அஷ்ரப் முறையூர், கர்நாடக வெல்ஃபேர் ஃபோரம் தலைவர், IFF ஜித்தா மாகாண செயற்குழு உறுப்பினர் அப்துல் ஹக்கீம், சமூக ஆர்வலர் டாக்டர் ஃபலக்கி ஆகியோர் பாபரி மஸ்ஜிதின் வரலாற்றை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது நமது பணியெனவும் இதனை மறக்கடிக்க பாசிசவாதிகள் முயன்று வருவதாகவும் தங்களது உரையில் தெரிவித்தனர். அத்துடன் இப்பணியினை செய்வதில் நாம் அஞ்சவோ பின் வாங்கவோ அவசியமில்லை. ஏனெனில் இது நமது உரிமை என குர்ஆன் வசனங்களை ஒப்பிட்டு விளக்கினார்கள்.
இதனிடையே பாபரி மஸ்ஜித் பற்றிய பாடல்களை வட்டார மொழிகளில் தவ்பீக், சுபைர் மற்றும் குழுவினர் ஆகியோர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் உர்து மொழிகளில் பாடினர். அவர்களின் உருக்கமான பாடல்கள் வந்திருந்தோரின் கண்களை குளமாக்கியதை காணமுடிந்தது.
பாபரி மஸ்ஜிதின் விழிப்புணர்வு வாரத்தையொட்டி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மூவருக்கு மேடையில் சிறப்பு அழைப்பாளர்கள் மூலம் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பங்கு பெற்ற ஏனைய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
IFF மாகாண தமிழக பிரிவு செயலாளர் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியினை அஜீஸ் மாஹி நெறிபடுத்தினார். வந்திருந்தோர் அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.
பாபரி பள்ளியின் வரலாறு மறக்கடிக்கப்பட்டும் இருட்டடிக்கப்பட்டும் வரும் இவ்வேளையில் அதன் உண்மை நிலைகளை பற்றி அறிந்து கொண்டதோடு அதனை மீண்டும் கட்டுவதின் அவசியத்தையும் உணர்ந்து கொண்டோம் என்பதை வந்திருந்தோர் தெரிவித்தனர்.

![]() |

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.