.

Pages

Friday, December 12, 2014

நான்கு தினங்களாக தாழ்வாக பறந்து செல்லும் ஜெட் விமானத்தால் பரபரப்பு !

கடலோரப்பகுதிகளில் ஒன்றாகிய அதிரை மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஜெட் ரக விமானம் பொதுமக்களின் காதை பிளக்கும் அளவிற்கு தாழ்வாக பறந்து செல்கிறது....

அதே போல் முத்துப்பேட்டையிலும் இந்த விமானம் தாழ்வாக பறந்து செல்வதாக கூறப்படுகிறது.

முத்துப்பேட்டை கடலோர கிராமங்களை சூழ்ந்த ஒரு பகுதி. ஒரு காலத்தில் இப்பகுதியில் விடுதலை புலிகள் நடமாடிய பகுதியாகும். ராஜிவ்காந்தி கொலைக்கு பிறகு தமிழகத்தில் விடுதலை புலி இயக்கம் தடை செய்யப்பட்டதால் நடமாட்டம் குறைந்தது. இங்கிருந்து ஒரு மணி நேரத்தில் இலங்கைக்கு செல்லும் தூரம் கொண்ட பகுதி என்பதால் விடுதலை புலிகள் இப்பகுதியில் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதி கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் உள்ள அலைத்திக்காடுகளில் ஒரு காலத்தில் பிரபாகரன் வந்து தங்கிய வரலாறும் உள்ளது. இந்த நிலையில் கடந்த நான்கு தினங்களாக வானத்தில் மிகவும் தாழ்வாக ஜெட் ரக விமானங்கள் வட்டமிட்டு பறந்து வருகிறது. காதை பிளக்கும் அளவிற்கு அதிக சத்தத்தை எழுப்பி செல்லும் இந்த விமானங்கள் சீறி பாய்ந்து செல்வதால் பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக நின்று விமானங்கள் செல்வதை வேடிக்கை பார்த்து வருகின்றனர். மேலும் இப்பகுதி பதற்றமான பகுதி என்பதாலும், கடலோர பகுதி என்பதாலும் என்ன நடக்க போகிறதோ? என்று மக்களை பீதி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் இப்குதியில் சுற்றி வரும் இந்த விமானங்கள் 'சுகாய்' ரக ஜெட் விமானங்கள் என்றும், தஞ்சாவூர் விமானப்படை தளத்திலிருந்து சோதனை ஓட்டத்திற்காக பறக்க விடப்பட்டதாகவும், இதை போன்ற ஜெட் விமானங்கள் புதியதாக 6 விமானங்கள் வந்துள்ளதாகவும் கடலோர காவல் படை போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானங்கள் என்று மக்களுக்கு தெரியாதனால்தான் இந்த பீதிக்கு காரணமாகும்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.