.

Pages

Thursday, December 4, 2014

குவைத்தில் பணிபுரிய வாய்ப்பு !

குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய உள்ள வாய்ப்பு குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய 50 வயதிற்குட்பட்ட குவைத் நாட்டின் கனரக மற்றும் இலகுரக வாகன நடப்பு ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் மற்றும் குவைத் ஒட்டுநர் உரிமத்தினை புதுப்பிக்கத் தவறிய ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் , உணவுப்படி மற்றும் குவைத் நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்
மேற்காணும் பணிக்கு விருப்பமும் தகுதியும் இருப்பின், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், ஒரு புகைப்படம் ஆகியவற்றுடன், எண்.42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு நேரிலோ அல்லது omcresum@gmail.com மின்னஞசல் முகவரிக்கோ உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, 9444696724; 044-22502267/22505886 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.