தஞ்சை மாவட்ட முஸ்ஸிம் மகளிர் உதவி சங்கம் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு செயல்ப்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் மூலம் முஸ்ஸிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை பெண்கள் மற்றும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகள், கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான உதவிகள் வழங்கப்படுகிறது.
இது குறித்த தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் வெளிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–
தஞ்சை மாவட்ட முஸ்ஸிம் மகளிர் உதவி சங்கத்துக்கு நன்கொடை தர விருப்பம் உள்ளவர்கள் காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட கலெக்டர், தஞ்சை என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு 40 ஆயிரமும், நகர்புறத்தில் உள்ளவர்களுக்கு 60 ஆயிரமும் ஆகும். தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து உதவிகளை பெற்று கொள்ளலாம். அத்துடன் ரூ.10 மதிப்புள்ள சுய கையொப்பமிட்ட உறுதி மொழி ஆவணம், தொடர்புடைய பள்ளிவாசல் ஜமாத்தின் பரிந்துரைக் கடிதம், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
இந்த மனுக்களை சங்க நிர்வாகக்குழு பரிசீலித்து தகுதியின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி உதவிகள் வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.