.

Pages

Tuesday, December 9, 2014

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

தமிழகத்தில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கல்வி தகுதியை பள்ளிகள் மூலமாகவே பெரும்பாலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், பட்டப்படிப்பு மாணவர்கள் தங்களின் கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவரும் வீட்டில் இருந்தே கூட தங்களின் கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எளிதாக பதிவு செய்ய முடியும். அதற்கான வழிகள் தான் இது.

1. புதிதாக ஆன்லைனில் பதிவுசெய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும்.

2. முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று கிளிக் கியர் பார் நியூ யூசர் ஐடி ரெஜிஸ்டிரேசன் என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

3. அதில் ஐ அக்ரீ என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவுசெய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, யூசர் ஐடி என்ற இடத்தில் புதியதாக ஒரு ஐடி கொடுக்கவும்.

4. பின்னர், தந்தை பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண், இமேஜ் கோடு என்ற இடத்தில், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோடு கொடுத்து சேவ் செய்தால் உங்களுக்கென்று ஒரு ஐடி கிரியேட் ஆகிவிடும்.

5. அடுத்து வரும் பக்கத்தில் உங்களது பர்சனல் டீடெய்ல், கான்டாக்ட் டீடெய்ல், குவாலிபிகேசன் டீடெய்ல், டெக்னிக்கல் டீடெய்ல் ஆகியவற்றை பூர்த்திசெய்து சேவ் செய்தால் உங்களது ரெஜிஸ்டர் நெம்பர் கிரியேட் ஆகிவிடும்.

கவனிக்க:
1. குவாலிபிகேசன் டீடெய்ல் பூர்த்தி செய்தவுடன் யேடு என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும். அதில் கிளிக் செய்து சேவ் கொடுக்கவும். இதேபோன்று டெக்னிக்கல் டீடெய்லும் செய்ய வேண்டும்.

2. மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் ஹோம் பகுதிக்கு சென்று பார்த்தால் பிரின்ட் ஐடி கார்டு என்று இருக்கும். அதை கிளிக் செய்து பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம்.

3. ஏதேனும் தவறு செய்திருந்தால் ஹோம் பகுதியில் மாடிபை காண்ன்டாக்ட் பகுதிக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.

4. அப்டேட் ப்ரொபைலில் சென்று ரெனிவல் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.