தஞ்சையில் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்ற தஞ்சாவூர் மக்களவை உறுப்பினரின் மகன் சாலைத் தடுப்பில் மோதி படுகாயமடைந்தார்.
மருத்துவக் கல்லூரிச் சாலை ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் கு. பரசுராமன். தஞ்சாவூர் எம்பியான இவரின் மனைவி விஜயலட்சுமி, மகள் பல்லவி,மகன் பவித்ரன்.
கந்தர்வக்கோட்டை தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படிக்கும் பவித்ரன் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு இருசக்கர வாகனத்தில் டியூசனுக்கு சென்றார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் 3-வது வாசலருகே சென்றபோது பின்னால் வந்த வாகனத்துக்கு வழிவிட அவர் ஒதுங்கினார்.
அப்போது சாலைத் தடுப்புச் சுவரில் வாகனம் மோதி, தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அவ்வழியே சென்றோர் மீட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த உறவினர்கள், கட்சியினர் மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு முதல்கட்டச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் பவித்ரனை சேர்க்க அவரது குடும்பத்தினர் விரும்பினர்.
அதன்படி தனியார் மருத்துவமனை அவசர ஊர்தி மூலம், மருத்துவர் குழுவும் உடன் செல்ல, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவித்ரன் கொண்டு செல்லப்பட்டார். மாலை 4 மணிக்கு அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்ததாக அதிமுகவினர் தெரிவித்தனர்.
தகவலறிந்த எம்பி கு. பரசுராமன் புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு மாலையில் வந்து சேர்ந்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.