.

Pages

Friday, December 5, 2014

2-வது முறையாக அமெரிக்கா விசா புதுப்பிக்க நேரடியாக தூதரகம் செல்ல தேவையில்லை ! அதிகாரி தகவல் !!

விசாவை 2-வது முறையாக புதுப்பிக்கும்போது நேரடியாக வரத் தேவையில்லை என சென்னையில் உள்ள அமெரிக்கா துணை தூதரகத்தில் விசா பிரிவு தலைமை அதிகாரி லாரன்ஸ் மேர் கூறினார்.

மேலும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
எங்களது முக்கிய நோக்கமே வியாபாரம், கல்வி, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக செல்வோர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கைகளில் எளிய முறையை பின்பற்ற வேண்டும் என்பதே. இந்த ஆண்டு 2 லட்சம் பயணிகளை அமெரிக்கா வுக்கு அனுப்பியுள்ளோம். நாள் ஒன்றுக்கு சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் விசாவுக்காக விண்ணப்பிக்கின்றனர்.

விசாவுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவதெல்லாம் தங்களுக்கு எந்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்த நேரத்துக்கு மட்டும் தூதரக அலுவலகத்துக்கு வந்து விசா பெற்று செல்ல வேண்டும். விசாவை புதுப்பிக்கும் போது 14 வயதுக்கு உட்பட்டோரும், 80 வயதுக்கு மேற்பட்டோரும் நேரடியாக வர தேவையில்லை என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. தற்போது இதை எளிதாக்கும் வகையில், இடைபட்ட பிரிவினருக்கும் இது போன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஒருவர் தனது விசாவை 2வது முறையாக புதுப்பிக்கும் போது நேரடியாக வரத் தேவையில்லை. ஆனால் முதல் முறை புதுப்பிக்கும் போது அவசியம் நேரடியாக வர வேண்டும். இந்த திட்டம் பலருக்கு உதவியாக இருக்கும்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.