.

Pages

Friday, December 5, 2014

அஞ்சல் அட்டையுடன் தமுமுக வினர்

'மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே !
டிசம்பர் 6,2014 பாபர் மஸ்ஜித் இடித்து 22 வருடங்களை நினைவுபடுத்துகிறது.இந்த தருணத்தில் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டுகின்றேன்.அப்பொழுது தான் நம்முடைய நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஊறு விளைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.மேலும் அன்றைய பிரதமர் திரு.நரசிம்மராவ் அவர்கள் இந்த தேசத்திற்கு உறுதி அளித்தபடி மசூதி இருந்த இடத்திலேயே மீண்டும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்கின்றேன்.' என்ற வாசகம் கொண்ட அஞ்சல் அட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பும் பணியினை கடந்த 1 ந் தேதி முதல் தமிழகமெங்கும் தமுமுகவினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுக்கூரில் உள்ள அஞ்சலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் தமுமுகவின் அனைத்து நிர்வாகிகளும் ஜமாத்தார்கள், பொதுமக்கள், மாணவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், வர்த்தகர்களிடமிருந்து பெற்ற சுமார் 1000 த்துக்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகளை அஞ்சல் செய்தார்கள்.
செய்தி மற்றும் படங்கள்:
தமுமுக மதுக்கூர் 

1 comment:

  1. Ethu muslemleak baane
    anru sonnar muslem leak thalaivar
    valka

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.