.

Pages

Wednesday, December 17, 2014

கல்விச்சேவையில் அதிரை அண்ணாவியார் சகோதரர்கள் !

அதிரையில் தன்னலம்பாராது கல்விச்சேவை புரிந்தோர் ஏராளாமானோர் அனைத்து தெருவிலும் உள்ளனர் என்றாலும் அவர்களில் குறிப்பிடத்தக்கவர் 'அதிரையின் கல்வித் தந்தை' சேக் ஜலாலுதீன் அப்பா அவர்கள்.

அவர்களுடைய MKN டிரஸ்ட் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட காதிர் முகைதீன் கல்லூரி, ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவை இன்றும் எண்ணற்றோருக்கு அறிவொளியை வழங்கிக் கொண்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ். அன்னாருடைய கல்விச்சேவையை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

அதுபோல், மேலத்தெருவில் எண்ணற்றோருக்கு ஆரம்ப நிலை கல்வியை வழங்கியவர்கள் பெரிய வாத்தியார் அப்பா, சின்ன வாத்தியார் அப்பா என அன்புடன் அழைக்கப்பட்ட சகோதரர்களான செய்யது முஹமது அண்ணாவியார் மற்றும் நூர் முஹமது அண்ணாவியார் ஆவார்கள்.
மழைப்பாட்டு பாடிய புலவர் நெய்னா முஹமது அண்ணாவியார் அவர்களின் உறவுகளான வாத்தியார் சகோதரர்கள் குழந்தைகளுக்கு ஆரம்ப நிலை கல்வியை கற்றுத்தர வேண்டும் என்ற நன்நோக்கில் இன்று எம்எம்எஸ் தேங்காய்வாடி அமைந்துள்ள இடத்தில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தனர். கால ஓட்டத்தில் பள்ளிக்கான மாற்று இடமாக அன்றைய 'சூனா வீட்டு' திண்ணையில் பள்ளிக்கூடம் தொடர்ந்துள்ளது.

இந்த ஆரம்ப பள்ளிக்கூடம் தான் பின்பு அரசு ஆரம்பப் பள்ளிக்கூடமாக மாறி அன்றைய தமிழக அமைச்சரும் பின்னாளில் இந்திய ஜனாதிபதியுமான (ராஜாமடத்தை சேர்ந்தவரும் மேலத்தெரு சூனா வீட்டு 'ரொக்கக்கேஸ்' என்கிற மர்ஹூம் நூர்தீன் அவர்களின் நெருங்கிய தோழரும் ராஜா மடத்தை சேர்ந்தவருமான ) வெங்கட்ராமன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு இன்றும் தொடர்கிறது ஆனால் அரசு பள்ளியான பின்பும் இந்தப்பள்ளிகூடம் மேலத்தெருவாசிகளால் இன்றும் 'சூனா வீட்டு பள்ளிக்கூடம்' என்றே நன்றியுடன் அழைக்கப்படுகிறது.
இந்த அண்ணாவியார் வாத்தியார் சகோதரர்களிடம் பாடம் பயின்ற மாணவர்களில் இருவர் இன்னும் அல்லாஹ் உதவியால் ஹயாத்துடன் உள்ளார்கள், அவர் எம்எம்எஸ் குடும்பத்தை சேர்ந்த முஹமது பாசின் மாமா அவர்கள் (கடைத்தெருவில் எம்எம்எஸ் மளிகை கடை என்ற பெயரில் கடை நடத்தியவர்கள்). இன்னொருவர் DMK மீரா சாஹிப் அவர்கள்.

பெரிய வாத்தியாரப்பா செய்யது முகமது அண்ணாவியார் அவர்கள் தன் குடும்பத்தினரை போலவே பல புத்தகங்களை எழுதியுள்ளார்கள் அதற்காக கீழக்கரை சீதக்காதி அறக்கட்டளையினரால் அவர்கள் ஹயாத்தாக இருந்த காலத்திலேயே ரூ.10,000 பொன்முடி வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும் அன்றைய குத்பா பள்ளியின் முத்தவல்லியாக இருந்து திறம்பட செயலாற்றி பள்ளிவாசலை சுற்றி ஒரு பூஞ்சோலையை உருவாக்கியிருந்தார்கள் மேலும் இன்று ஜூம்ஆ பள்ளிக்கு முன்புறம் வணிக வளாகமாக மாறிவிட்ட புளியமரத்து மையத்தாங்கரையை சுற்றி முள்வேலி அமைத்தும் பாதுகாத்தார்கள். இவர்களுடைய நிர்வாகத்தில் பள்ளி இருந்தவரை நோன்பு திறக்கும் நேரத்தை ஊருக்கே கேட்டுமளவு சக்தி வாய்ந்த வெடியை வெடித்து அறிவிக்கும் பழக்கமிருந்தது.

அந்தக்காலத்தில் வீட்டுக்குவீடு தண்ணீருக்காக கிணறு தோண்டும் பழக்கமிருந்ததால் நீரோட்டம் பார்ப்பதற்கு பெரிய வாத்தியரப்பா அவர்களை அழைக்கும் வழக்கம் மக்களிடமிருந்தது. அவர்களுடைய கண்டிப்புக்கு அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமல்ல முஹல்லாவே கட்டுப்பட்டது, அதனால் தான் சுமார் 350 வருட பழமையான குத்பா பள்ளியை மிகச்சிறப்பாக அவர்களால் நிர்வகிக்க முடிந்தது.
பெரிய வாத்தியாரப்பா மற்றும் அண்ணாவியார் குடும்பத்தினரின் இலக்கிய படைப்புக்களை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக நூலகத்தில் வைத்து சிறப்பு சேர்த்துள்ளனர்.

பெரிய வாத்தியரப்பா செய்யது முஹமது அண்ணாவியார் அவர்கள் குத்பா பள்ளி நிர்வாகியாக இருந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு துணையாக 'வாத்தியப்பா' என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட மர்ஹூம் 'அகமது ஜலாலுதீன் காக்கா' அவர்கள் அனைத்து வக்து தொழுகைகளுக்கும் ஆஜராகக்கூடிய நல்ல மனிதராக திகழ்ந்தார்கள் மேலும் அரிக்கேன் விளக்குடன் இஷா மற்றும் சுபுஹூ தொழுகைக்கு வரும் அழகும், பாங்கு சொல்லும் மாண்பும் யாராலும் மறக்க முடியாதவை. இந்த வாத்தியப்பா அவர்கள் தன் வீட்டு வாசலில் மக்களுக்கு பயன்தரும் வகையில் நல்ல தண்ணீர் கிணறு தோண்டி இலவச விநியோகம் செய்த சிறப்புக்குரியவர்கள்.

குத்பா பள்ளியையே தன் வீடாக கருதி சேவகம் செய்துவந்த மர்ஹூம் ஷரீஃப் அப்பா அவர்களும் வாத்தியாரப்பா அண்ணாவியார் அவர்களுக்கு ஒரு துணையாக இருந்தார்கள். அதேபோல் மேலத்தெரு குட்டப்புறா வீட்டுக்கு அடுத்த வீட்டில் செந்தூரம் விற்கும் வீட்டைச் சேர்ந்த அப்பா ஒருவரும் (பெயர் தெரியவில்லை) தவறாமல் தொழுகையை பேணக்கூடியவராக இருந்தார்கள்.

அண்ணாவியார் அப்பா போலவே கல்விச்சேவை புரிந்த இன்னொருவரை பற்றியும் எழுதவில்லையானால் இந்தத் தொகுப்பு நிறைவு பெறாது, பட்டுக்கோட்டையில் டுட்டோரியல் கல்லூரி ஒன்றையும் அதிரையில் இமாம் ஷாபி பள்ளிக்கூடத்தையும் நிறுவிய மர்ஹூம் குழந்தை சேக்காதி அவர்கள் தான் அது. கல்விச்சேவைக்கு மேல் மேலத்தெரு பாக்கியாத்து ஸாலிஹாத் பள்ளிவாசலை நிறுவியவர்களில் ஒருவராகவும் ஜூம்ஆ பள்ளியின் கட்டுமானத்திலும் தன் பங்கையாற்றியவர்கள்.

இந்தத் தொகுப்பை எழுதுவதற்கு காரணமாக இருந்த அதிரை அஹமது காக்கா அவர்களுக்கும் அவர்களின் பதிவான 'அதிரை வரலாற்றில் நான் கண்ட நல்லவர்கள்'

http://adirainirubar.blogspot.ae/2014/12/blog-post_55.html

என்ற தொகுப்புமே முக்கிய காரணம் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நினைவலைகள் பகிர்வு
எஸ். அப்துல் காதர் & அதிரை அமீன்

5 comments:

  1. இதுபோன்ற வரலாற்று பதிவு மூலம் நல்லவர்களை நினைவு கூருவதால் இன்றைய இளைய தலைமுறையினருக்கு
    அடையாலம்கான முடியும் நன்றி.

    ReplyDelete
  2. எங்கள் அப்பா ம்ஹும் ஜனாப் அண்ணாவியார் அப்பா அவர்கள் அதிரையில் கல்வி இல்லாத ஒரு காலத்தில் கல்வியை கத்துக்கொடுத்தார்கள் அது மற்றும் மா அதிரையில் கம்பிரமாக நிற்கும் மேலத்தெரு ஜும்மா பள்ளியில் தன்னுடைய தலைமையில் நல்ல ஓரு நிர்வாகத்தை அமைத்துக் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நல்ல செய்தியை வெளியிட்ட அதிரை நீயூஸ்க்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள்

    ReplyDelete
  3. எந்த நோக்கத்திற்காக நம் சமுதாய மக்களின் கல்வி கண் திறந்த நம் முன்னோர்கள் அவை நிறைவேறியதா? அந்தக் காலத்தில் குடும்பத்தின் கஷ்ட நிலையால் நாங்க படிக்க வில்லை என்பார்கள், கல்வி வியாபாரமான இந்தக் காலத்தில் அதே நிலைதான், மாணவர்கள் மேல்நிலை முடித்து விட்டு கல்லுரி சேர்ந்து படித்தாலும் தரமான கல்வி அடையாமல் மீண்டும் முன்னோர்கள் செய்த வேலைக்கே செல்வது காலத்தின் கொடுமை.

    மக்களை பண்புள்ளவர்களாக மாற்றுவது கல்வியே ( மார்க்க கல்வி ,உலகக் கல்வி ), அதனை எட்டி இருக்கோமா? ஒவ்வொரு தெருவிலும் இன்னும் அடிப்படை கல்வி பெறாத குழந்தைகள் இருக்கத்தான் செய்கிறார்கள் அல்ல்லது படிப்பை இடையில் முடித்து விட்டு வெளிநாடு பறந்து விடுகிறார்கள். என்றைக்கு 100% சதவிகிதம் அதிரையர்கள் படித்தவர்கள் என்ற நிலை எட்டுவது? இதற்க்கு வழிபிறக்காதா?

    Vision , Mission - 2030 அமைத்து ஒவ்வொரு அமைப்பும் செயல் பட்டால் கண்டிப்பகா நம் முன்னோர்கள் கண்ட கனவை நினைவாக்கலாம் .

    தமிழ் நாட்டில் அரசியல் கட்சி தோன்றினாலும் அதற்க்கு தொண்டனும் , பிரமுகர்களும் நம்மூரில் காணலாம், அடிமையிலிருந்து விடுப்பட்டு தேசிய தலைவர்களாக, அறிவியல் வல்லுனர்களாக, மருத்துவ மேதைகளாக நம் சமுதாய மாணவர்களை மாற்ற வேண்டும்!

    கல்வி தந்தைகளுக்கு நாம் பெருமை சேர்ப்பதோடு நம் சமுதாயம் தழைத்தோங்கும் என்பதில் ஐயம் இல்லை

    ReplyDelete
  4. அல்லாஹு விற்காக உழைத்த நம் முன்னோர்களுக்கு அல்லா நற் கூலி கொடுக்க துஆ செய்ய நாம் கடமை பட்டு உள்ளோம் .

    இன்ஷா அல்லா. நாம்மிலும் இதே போன்றவர்களை உருவாக அல்லா போதுமானவன்.

    இன்னல் அமாலு பின் நீயாத் ( ஒவொரு செயலும் நீயதை கொண்டு அமைகிறது )

    ReplyDelete
  5. கல்விக்கண்திறந்தசான்றோர்களைகண்ணுள்ளவரை மறக்கவேண்டாம்.இவர்களுக்காகஊரில்ஒருநினைவுபூங்காஅமைக்கலாம்.கல்விதந்தையர்களைநினைவுட்டியகட்டுரையாளருக்குநன்றி.அஸ்ஸலாமுஅலைக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.