அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு சமூக நல சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. அதிரை பேரூராட்சி எல்லைக்குப்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களை ஆற்றுநீர் கொண்டு முறையாக நிரப்பிய பேரூராட்சி நிர்வாகத்திற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக சமூகநல சங்கத்தின் செய்தி தொடர்பாளர் முகம்மது சாலிஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்...
" கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு கொண்டிருக்கும் சமூகநல சங்கம் சென்னை மற்றும் அதிரைக்கு தேவையான அரசு திட்டங்களை பெற்று அது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்து வருகிறது. இதில் குறிப்பாக அதிரை மின்வாரியம், புதிய தொலைபேசி தொடர்பகம், சார்பதிவாளர் அலுவலகம் போன்ற மக்களுக்கு தேவைப்பட கூடிய அரசு அலுவலங்களும் அடங்கும்.
மேலும் நமதூர் பகுதிகளுக்கு குளங்களை நிரப்ப ஆற்றுநீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டன. கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன் நீர் திறந்துவிடப்பட்டது. அதனை முறையாக பயன்படுத்தி குளங்களை நிரப்பிய பேரூராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் சமூகநல சங்கத்தின் சார்பில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம். சமூகநல சங்கத்தின் சார்பில் திருவாரூர்-காரைக்குடி அகலரயில் பாதை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்றுவருகிறது. இருப்பினும் இந்த ரயில்வே பணிகளை விரைந்து முடித்து தர வலியுறுத்தி அமைச்சர்களை நேரில் சந்திக்க உள்ளோம் அதற்கு இந்த ரயிவே வழித்தடத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.