.

Pages

Wednesday, December 10, 2014

முத்துப்பேட்டையில் சீமான் !

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்று விழா தெற்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். இதில் சீமான் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார். பின்னர் தொண்டர்களுடன் கொள்கை உறுதிமொழி ஏற்றார். நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது, மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவணம் கார்த்திக், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வேதாபாலா, மண்டல செயலாளர் தென்றல் சந்திர சேகர், வடக்கு மாவட்ட செயலாளர் கந்தன,; மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் வடுவூர் முருசேகன், மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், மாணவர் பாசறை செயலாளர் வீரசேகரன், ஒன்றிய துணை செயலாளர் கரையங்காடு சரவனன், நகர செயலாளர் செந்தில், ஒன்றிய இணைச் செயலாளர் ராஜேஷ், நகர இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ், நகர நிர்வாகிகள் ஜெக்கரியா, சீனிவாசன், ஹஜ்முகம்மது ஒன்றிய நிர்வாகிகள் ஜாம்மை சேகர், செல்லப்பா, தீபன், உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். இதே போல் இடும்பாவணம் கடைவீதியில் அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் சீமான் கொடி ஏற்றி வைத்தார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

1 comment:

  1. போன சட்டமன்ற தேர்தலில் பார்த்த இவரை இப்பதான் பார்க்க முடிகிறது. காங்கிரஸ் பற்றி அதிகமாக விமர்சித்த இவர் மோடி அரசில் நடக்கும் இந்துத்துவா பற்றி வாய்திறக்கல, சமீபத்தில் கீதை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கூறிய சுஷ்மா கருத்துக்கு நெடுமாறன் கூட கண்டனத்தை கூறினார். வாய்ச்சவடால் ஒன்றும் சொல்லலே! போக்கத்தவனுக்கு கட்சி வேற!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.