.

Pages

Wednesday, December 10, 2014

வேட்டிய மடிச்சி கட்டிகிட்டு களத்தில் நிற்கும் அதிரை கவுன்சிலர்கள் !

அதிரை நடுத்தெரு கீழ்புறம், வாய்க்கால் தெரு, புதுத்தெரு ஆஸ்பத்திரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தக்வா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 1 ம் நம்பர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். அதே போல் பள்ளி மாணவிகளும் இந்த சந்தின் வழியாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று வருகின்றனர். மக்கள் நடமாட்டத்துடன் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்த சந்து பகுதியில் அதிகளவில் குப்பை கழிவுகள் குமிந்து வந்தது. மேலும் இந்த பகுதியின் குடியிருப்பிலிருந்து வெளியேறும் கழிவு நீர் தாழ்வான பகுதியில் தேங்கி துர் நாற்றமும் வீசி வந்தது. இதனால் இப்பகுதியில் செல்லும் பள்ளி மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் சம்பந்தபட்டோரிடம் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை இந்த சந்தில் குமிந்து காணப்படும் குப்பைகளையும், வீடுகளிலிருந்து வெளியேறி தேங்கி நின்ற கழிவு நீரையும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மை படுத்தும் பணியை இந்த பகுதிகளின் கவுன்சிலர்கள் அப்துல் காதர், நூர்லாட்ஜ் செய்யது ஆகியோர் ஈடுபட்டனர். இந்த பணிகள் அனைத்தும் முடியும் வரை உடன் இருந்து மேற்பார்வையிட்டனர். வேட்டியை மடிச்சி கட்டிக்கிட்டு துப்புரவு பணியாளர்களிடம் களத்தில் நின்று வேலை வாங்கியது இப்பகுதியில் சென்றோரை வியப்பில் ஆழ்த்தியது. இதுபோல் அதிரையின் பிற பகுதிகளின் கவுன்சிலர்களும் அந்தந்த பகுதிகளில் ஏற்படும் குறைகளை களத்தில் நின்று சரிசெய்ய வேண்டும் என ஆர்வலர்கள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.