.

Pages

Thursday, December 4, 2014

கர்நாடகாவைக் கண்டித்து அதிரையில் பஸ் மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோர் கைது ! [ படங்கள் இணைப்பு ]

காவிரியின் குறுக்கே அணைகட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை குழு அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரையில் இந்திய கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கத்தினரும் இணைந்து பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

இதில் அதிரை நகர திமுக வினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் கலந்துகொண்டு மறியல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு செல்லியம்மன் சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. கர்நாடகாவைக் கண்டித்து அதிரையில் பஸ் மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோர் கைது அதனால ஒன்றும் நடக்க போவதில்லை இதையே பேரூராட்சி கண்டித்து அதிரையில் பஸ் மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோர் கைது இது தான் நடக்கணும், பேருந்து நிலைய ரோடு எப்படி இருக்குன்னு பாருங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.