.

Pages

Saturday, December 13, 2014

கட்சியை வளர்க்க 'பிறந்தநாள் விழா' முத்துப்பேட்டை காங்கிரஸ் புது திட்டம் அறிமுகம் !

முத்துப்பேட்டையில் சமீபத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் வாசன் பிரிந்து புது கட்சி துவங்கியதையடுத்து காங்கிரஸ் கட்சியை வளர்க்க புதுபுது திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நாம் இதுவரை கட்சியின் தலைவர்களின் பிறந்த நாளைதான் கொண்டாடுகிறோம் ஏன் ஒவ்வெறு தொண்டர்களின் பிறந்தநாளை கொண்டாட கூடாது ? என்று விவாதிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடையும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதனால் தொண்டர்களின் பிறந்தநாளை கணக்கீடபட்டது. அதன்படி இந்த திட்டத்தின் முதல் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பலவருடமாக காங்கிரசில் இருந்துவிட்டு சில ஆண்டுக்கு முன் விடுதலை சிறுத்தை கட்சிக்கு சென்ற முகமது அனிபா, வாசன் பிரிந்து சென்ற பிறகு கட்சியில் தானாக இணைத்துக்கொண்டார். முறைப்படி திருவாரூரில் நடைப்பெறும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூட்டத்தில் இணைகிறார். இவரின் பிறந்த நாள் நேற்று என்பதால் 'தொண்டர் பிறந்தநாள் விழா' நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட துணைத்தலைவர் நாச்சிக்குளம் தாஹீர,; மாவட்ட பொதுச்செயலாளர் பகுருதீன், மாவட்ட செயலாளர் வைரவநாதன், வட்டார நிர்வாகி உதயை தங்கராஜன், நகர நிர்வாகிகள் ஜெகபர் அலி, பேட்டை மஸ்தான் சாகுல் ஹமீது, குலாம் ரசூல் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். இதுகுறித்து மாவட்ட துணைத்தலைவர் நாச்சிக்குளம் தாஹீர் கூறுகையில்: 'கட்சியை வளர்க்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த தீர்மானித்து உள்ளோம.; அதன்படி 'தொண்டர் பிறந்தநாள் விழா' துவக்கி உள்ளோம். ஒவ்வறு தொண்டர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி அவர்களின் வீடு தேடி சென்று சளைக்காமல் வாழ்த்து தெரிவிப்போம்' என்றார்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

1 comment:

  1. காங்கிரஸ் கட்சின் கடுமையான ஊழலாலும், கோஷ்டிகளின் பிடியில் கட்சி இருந்ததாலும், சாதனைகளை மக்களிடம் சொல்லத்தவரியனாலும் தேர்தலில் தோல்வி அடைய காரணம், இதை வைத்து பிரச்சாரம் பண்ணிய பிஜேபி ஆட்சி பிடித்து இன்று கோவில் கட்டுவது என்பதும்..சமஸ்கிருதம் படிக்க சொல்லுவதும்..அந்த கடவுளின் பிள்ளைகள்தான் எல்லோரும்..அப்படி இல்லை என்றால் அவர்கள் தவறுதலாக பிறந்தவர்கள் என்று சொல்லுவதும் தேர்ந்தேடுக்கப்பட்ட MP ஒவ்வொருத்தரும் ஒருவிதமாக தினமும் கூறி வருகின்றனர்.

    மக்கள் பிரச்சனை கையில் எடுத்து உறுப்பினர்கள் தெருவில் போராடதவரை கட்சி வளர்ப்பது கடினம். டெக்னாலஜி பயன்படுத்தி ஆட்சி பிடிக்கும் காலம் இது. கட்சி வளரும் ஆனா பார்த்து வளர்க்கணும் அதாங்க கோஷ்டியே சொன்னேன்!

    பிறந்தால் காணும் அன்பருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.