இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குழாயில் ஏற்பட்ட உடைப்பால், இதிலிருந்து கழிவு நீர் வெளியேறி பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியின் பிராதன சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதியின் வார்த்தகர்கள் - குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வெளியேறி வரும் கழிவுநீர் துர் நாற்றம் வீசி வருவதாகவும் கூறப்படுகிறது.
Monday, December 15, 2014
உடைந்து போன கழிவு நீர் வடிகாலை சீர் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல் !
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குழாயில் ஏற்பட்ட உடைப்பால், இதிலிருந்து கழிவு நீர் வெளியேறி பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியின் பிராதன சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதியின் வார்த்தகர்கள் - குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வெளியேறி வரும் கழிவுநீர் துர் நாற்றம் வீசி வருவதாகவும் கூறப்படுகிறது.
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இந்த உடைந்து போன கழிவு நீர் வடிகாலை சீர் செய்வது சம்பந்தமான பொதுமக்களின் கோரிக்கையை எங்களின் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம். இது தொடர்பாக நாளை காலை பணியாளர்களை அனுப்பி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தலைவர், பேரூராட்சி மன்றம், அதிராம்பட்டினம்.
ReplyDeleteஉடனடி தீர்வுக்கு தந்த நமது தலைவருக்கு ஒரு சலாம் போடு.
ReplyDeleteவாழ்த்துக்கள்
Ok good reply from chairman. What about re construction of waste water kalvai from register office to ECR road. Please replay .
ReplyDeleteஹலோ எங்க ஊர் தலைவரே!! இந்த 11வது வார்டு அதிரையில் தான் இருகின்றது (அதாவது உங்கள் தொகுதியில் தான் இருகின்றது தலைவரே) என்பதை உங்களுக்கு ஞாபகம் படுத்த வேண்டியதாக இருகின்றது.. அது என்னமோ உங்களுக்கு எங்கள் வார்டு கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது. நாங்களும் எத்துனை தடவ தான் சார் உங்ககிட்ட வந்து முறையிடறது.
ReplyDeleteநீங்கள் தேர்தல் நேரத்தில் கூறியது போல், எங்களுக்கு சின்ன சிங்கபுரெல்லாம் ஆக்கவேணாம் கொஞ்சம் அந்த சாக்கடைக்கு தோண்டுன கல்லையும், சாக்கடையும், ரோடு போட்டு தந்து , தண்ணீர் பற்றாகுறை இல்லாமல் இருந்தாலே போதுமானது சார்.
இப்படிக்கு,
அப்துல் மாஜித்.
அப்துல் மஜீத் அவர்களுக்கு,
ReplyDeleteநமது தொகுதியில் எந்த வார்டாக இருந்தாலும் சரி அவ்வப்போது ஏற்படுகின்றன சிறிய அளவிளான பிரச்சனைகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்துவருகின்றோம். நமது பேரூறாட்சிக்கு கிடைக்கின்ற வருவாயைக்கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளும் மற்றும் துப்புரவு பணி யார்களுக்கு ஊதியமும் வழங்கப்படுகின்றது. நமது பேரூறாட்சிக்கு பெருமளவுக்கு வருவாய் கிடையாது என்பது 11 வது வார்டு உறுப்பினரும் நன்கு அறிந்த விஷயமே. தண்ணீர் பற்றாகுறை இல்லாதவாறு நடவடிக்கை எடுப்பதென்பது 20 அல்லது 30 இலட்சம் ரூபாய் திட்டத்தில் அதை நாம் செயல்படுத்தவேண்டும். இது வரையில் இது போன்ற பெரிய அளவிளான திட்டம் வேறு எந்த வார்டிலும் செய்யப்படவில்லை. இதுபோன்ற பெரிய அளவிளான திட்டங்களை மாநில அரசு வெளியிடும்போது நாம் அந்த திட்டம் நமது ஊருக்கு கிடைக்க தவறாமல் முயற்சிசெய்வோம். நீங்கள் என்னிடம் பலமுறை வந்து முறையிட்ட மனுவின் நகல் உங்களிடத்தில் இருந்தால் அதை நீங்கள் மறக்காமல் எடுத்துவாருங்கள். என்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுக்க ஒருபோதும் நான் தாமதித்ததில்லை.
பெருந்தலைவர்,
பேரூராட்சி மன்றம்,
அதிராம்பட்டினம்