.

Pages

Monday, December 15, 2014

இஸ்லாமிய சிறுமிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பொம்மை !

பிரித்தானியாவில் முகத்தில் கண், மூக்கு, வாய் என்று எதுவும் இல்லாமல் வெறுமனே உள்ள பொம்மை முஸ்லீம் சிறுமிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள லங்காஷயரில் இருக்கும் முஸ்லீம் பள்ளியில் ஆசிரியையாக இருந்தவர் ரித்வானா. அவர் இஸ்லாமிய சட்டத்தின்படி முஸ்லீம் சிறுமிகளுக்காக பிரத்யேகமான பொம்மையை வடிவமைத்துள்ளார்.

தீனி பொம்மை ( Deeni Doll ) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பொம்மையின் முகத்தில் கண், மூக்கு, வாய் என்று எந்த உறுப்பும் இல்லாமல் வெறுமையாக உள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்டு இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்த பொம்மையின் விலை ரூ. 2 ஆயிரத்து 516 ஆகும்.

இது குறித்து ரித்வானா கூறுகையில், சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் முகத்தில் கண், மூக்கு, வாய் உள்ள பொம்மைகளை பயன்படுத்துவது குறித்து கவலை தெரிவித்தனர்.

இதனால் தான், நான் இந்த பொம்மையை வடிவமைத்தேன். சில பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் அறையில் இரவில் பொம்மையை வைக்க மாட்டார்கள். ஏனென்றால் அறையில் கண்கள் உள்ள பொம்மைகள் இருக்கக் கூடாது. இஸ்லாமிய சட்டப்படி முகத்தை படமாக வரைவது, சிற்பம் செதுக்குவது கூடாது என்று கூறியுள்ளார்.

Source: http://www.ibtimes.co.uk/

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.