.

Pages

Tuesday, December 9, 2014

போட்டித் தேர்வு எழுதுவது எப்படி? மாதிரித் தேர்வு மற்றும் பயிலரங்கம் நிகழ்ச்சி !

பேராவூரணி தமிழ்ப் பல்கலைக்கழக கல்வி மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்வது எப்படி என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் மற்றும் குரூப் 4 க்கான அசல் மாதிரித் தேர்வு நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக தமிழ்ப் பல்கலைக்கழக பேராவூரணி கல்வி மையத்தில் குரூப் 4 க்கான இலவச மாதிரித் தேர்வு நடைபெற்றது. இதில் சென்னைத் தலைமைச் செயலக அதிகாரி சுப.வடிவேல் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். இந்நிகழ்வில் 82 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலை நிலைக் கல்வி இயக்ககம் வழி தமிழ்ப் புலவர் பயிற்சி பாடம் முடித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் வே.கயல்விழி, ஜெ.செல்வக்குமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தொழிலதிபர் வி.டி.சக்கரபாணி அவர்களால் பாராட்டப்பட்டனர். நிகழ்வில் பாவலர் மு.தங்கவேலனார், அருள்திரு த.ஜேம்ஸ், சித.திருவேங்கடம், பைங்கால் மதியழகன், கெ.ஜெயபால், எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தா.கலைச்செல்வன் வரவேற்றார். நிறைவாக மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
எஸ். ஜகுபர் அலி, பேராவூரணி.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.