.

Pages

Thursday, December 11, 2014

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு !

தமிழ்நாட்டில் மின் கட்டணம் 15% உயர்த்தப்பட்டு உள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. மின்கட்டண உயர்வு நாளை ( 12-12-2014 ) முதல் அமலுக்கு வருவதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது.

உயர்த்தப்பட்ட மின் கட்டண விபரம்:
நிலையான கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதல் 100 யூனிட் வரையிலான மின் கட்டண உயர்வு ரூ.2.60ல் இருந்து ரூ.3ஆக உயர்ந்துள்ளது.

100 யூனிட் முதல் 200 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.80ல் இருந்து ரூ.3.25ஆக உயர்ந்துள்ளது.

201 யூனிட் முதல் 500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.4ல் இருந்து ரூ.4.60 ஆக உயர்ந்துள்ளது.

501 யூனிட் முதல் அதற்கு மேல் யூனிட் வரையில் ரூ.5.75ல் இருந்து ரூ.6.60ஆக உயர்ந்துள்ளது.

1 comment:

  1. படிப்படியாக மின்வெட்டு குறைக்கப்படும் என்று ஜெயலலிதா சொன்னார்.... ஆனால் படிப்படியாக விலைவாசிகள் தான் உயர்த்தி வருகிறார்...தனது தேர்தல் பிரசாரத்தில் 6 மாதத்தில் மின்வெட்டு அகற்றப்படும்....5 வருடத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும் என என சொல்லி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் ஆட்சி முடிய 15 மாதம் உள்ள நிலையில் ...இவரால் நிறைவேற்ற முடியுமா ? எந்த மின்சாரம் வைத்து ஆட்சிக்கு வந்தாரோ அதே மின்சாரம் வைத்து ஆட்சியை இழக்க போகிறார்...பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்ட "விஷன் தமிழ்நாடு 2023" பற்றி இப்போது வாயே திறக்கவில்லை....இது பினாமி ஆட்சி மட்டும் அல்ல....வெற்று அறிக்கை ஆட்சியையும் கூட.

    செயல் படாமல் இருக்கும் பன்னீருக்கும், சோம்பலில் உறங்கும் ஜெயாவுக்கும் ஷாக் கொடுக்க போராட்டங்கள் ரொம்ப தேவை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.