உயர்த்தப்பட்ட மின் கட்டண விபரம்:
நிலையான கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதல் 100 யூனிட் வரையிலான மின் கட்டண உயர்வு ரூ.2.60ல் இருந்து ரூ.3ஆக உயர்ந்துள்ளது.
100 யூனிட் முதல் 200 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.80ல் இருந்து ரூ.3.25ஆக உயர்ந்துள்ளது.
201 யூனிட் முதல் 500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.4ல் இருந்து ரூ.4.60 ஆக உயர்ந்துள்ளது.
501 யூனிட் முதல் அதற்கு மேல் யூனிட் வரையில் ரூ.5.75ல் இருந்து ரூ.6.60ஆக உயர்ந்துள்ளது.

படிப்படியாக மின்வெட்டு குறைக்கப்படும் என்று ஜெயலலிதா சொன்னார்.... ஆனால் படிப்படியாக விலைவாசிகள் தான் உயர்த்தி வருகிறார்...தனது தேர்தல் பிரசாரத்தில் 6 மாதத்தில் மின்வெட்டு அகற்றப்படும்....5 வருடத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும் என என சொல்லி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் ஆட்சி முடிய 15 மாதம் உள்ள நிலையில் ...இவரால் நிறைவேற்ற முடியுமா ? எந்த மின்சாரம் வைத்து ஆட்சிக்கு வந்தாரோ அதே மின்சாரம் வைத்து ஆட்சியை இழக்க போகிறார்...பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்ட "விஷன் தமிழ்நாடு 2023" பற்றி இப்போது வாயே திறக்கவில்லை....இது பினாமி ஆட்சி மட்டும் அல்ல....வெற்று அறிக்கை ஆட்சியையும் கூட.
ReplyDeleteசெயல் படாமல் இருக்கும் பன்னீருக்கும், சோம்பலில் உறங்கும் ஜெயாவுக்கும் ஷாக் கொடுக்க போராட்டங்கள் ரொம்ப தேவை.