இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக செடியன் குளத்தில் காணப்படும் வடிகாலின் ஒரு பகுதி உடைந்து அதிலிருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள தாழ்வான பகுதியாகிய பிலால் நகர் குடியிருப்பு, பிராதான சாலைகளில் வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்கு செல்வோரும், வாக்கிங் செல்வோரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் செடியன் குளத்தின் தண்ணீர் பிலால் நகர் பகுதியில் ஆங்காங்கே தேங்கி காணப்படுவதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இப்பகுதியின் ஆர்வலர்கள் எச்சரித்தனர் மேலும் பல்வேறு தரப்பின் கடின முயற்சியின் கீழ் கொண்டு வந்த தண்ணீர் வீணாக வெளியேறி வருவது மிகுந்த கவலை அளிப்பதாகவும் கூறினார்கள்.
இந்நிலையில் இன்று காலை அதிரை பேரூராட்சியின் சார்பில் செடியன் குளத்தின் வடிகாலிலிருந்து கசியும் நீரை மண் மூடைகள் வைத்து சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பேரூராட்சியின் 15 வது வார்டு உறுப்பினர் அப்துல் லத்திப் உடனிருந்து கவனித்து வருகிறார்.








மக்களின் கவுன்சிலர் அப்துல் லத்தீப் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
ReplyDeleteமக்களின் கவுன்சிலர் லதிப் இப்ப தான் கலத்துக்கு வந்து கிறாரு
ReplyDeleteஇப்பத்தான் இல்லை எப்போதுமே இருப்பார்
DeleteThis comment has been removed by the author.
DeleteMr star news , he always in the field, your certificate no need for him, he got enough,
DeletePadam nalla erukku
ReplyDeleteT shirt new ?
ReplyDeleteNazeer Brother Mobile also New see ......
ReplyDelete