.

Pages

Sunday, December 7, 2014

அபுதாபியில் காயிதேமில்லத் ஆவணப்படம் வெளியீட்டு விழா !

இந்தியத் திருநாடு இரண்டாகப் பிரிந்த நேரம். அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜின்னா இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களை அரசு விருந்தினராய் பாகிஸ்தான் அழைக்கிறார். அழைப்பை ஏற்று இந்தப் பெருந்தகையும் அங்கு சென்றார். விருந்தில் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் நேரம்.. அங்கிருந்த அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் லியாக்கத் அலிகான் காயிதேமில்லத் சாஹிபிடம் 'சாஹிப்! இந்தியாவில் முஸ்லீம்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால்  சொல்லுங்கள்.

உங்களுக்கு உதவ பாக்கிஸ்தான் தயாராக இருக்கிறது' என்றார். கடும் கோபம் கொண்ட சாஹிப் ' எப்போது எங்களைப் பிரிந்து வந்தீர்களோ அன்றே நீங்கள் எங்களுக்கு அன்னியர். எங்கள் தேசத்தில் இந்தியர்களுக்குள் பிரச்சனை என்றால் அதைத் தீர்த்துக்கொள்ள இந்தியர்களான எங்களுக்குத் தெரியும். நீங்கள் பாகிஸ்தானில் இருக்கும் சிறுபாண்மை இந்துக்கள்,கிற்ஸ்துவர்களின் நலனில் கவனம் செலுத்துங்கள் எனவே உம் உதவி எமக்குத் தேவையில்லை என்றார் கோபமாக‌ என்ற வரலாற்று சம்பவம் அபுதாபியில் காயியேமில்லத் ஆவண பட விழாவில் நினைவூட்டப்பட்டது.

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை வெளியீட்டில் ஆளூர் ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்பட வெளியீட்டு விழா 4 ம் தேதி மாலை  மணியளவில் அபுதாபியில்  நடைபெற்றது.அப்போது காயிதேமில்லத வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன‌

காயிதேமில்லத் பேரவை உறுப்பினர் லால்பேட்டை சல்மான் நிகழ்ச்சியின் தலைமையை முன்மொழிய பேரவையின் செயலாளர் வழுத்தூர் முஹையத்தீன் பாட்ஷா வழிமொழிந்தார்.நிகழ்ச்சிக்கு அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி தலைமை தாங்கினார். அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹீல் ஹமீத் அமீரக காயிதேமில்லத் பேரவை துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிரை தவ்சீஃப் ரஹ்மதுல்லாஹ் இறைமறை வசனங்களை ஓதினார்.அமீரக காயிதேமில்லத் பேரவை அமைப்புச் செயலாளர் லால்பேட்டை A.S.அப்துர்ரஹ்மான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.பேரவையின் பொதுச்செயலாளர் முஹம்மது தாஹா வரவேற்புரையாற்ற பேரவையின் பொருளாலர் ஹமீதுர்ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார்.

அபுதாபி நோபல் குழும நிர்வாக இயக்குனர் சமுதாய புரவலர் ஷாஹீல் ஹமீத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் ஆடுதுறை A.M.ஷாஜஹான்மாநில துணைச் செயலாளர் மில்லத் S.B.முஹம்மது இஸ்மாயில் மாநில உடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

ST கூரியர் நிர்வாக இயக்குனர் நவாஸ் கனி கருத்துரை வழங்க ஆவணப்பட இயக்குனர்ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார்.யிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் M.அப்துர்ரஹ்மான் Ex MP அவர்கள் நிறைவுரையாற்றினார்.

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தின் சிடியை முன்னாள் எம்பி அப்துர்ரஹ்மான் வெளியிட அதன் முதல் பிரதியை சாஹீல் ஹமீத் நவாஸ் கனி இரண்டாம் பிரதியை அய்மான் சங்கத்தின் சையது ஜாஃபர் மூன்றாம் பிரதியை அய்யம்பேட்டை வாலன் ஜெய்லான் பாட்ஷா ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.

கண்ணியத்திற்குரியகாயிதேமில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் திரையிடப்பட்டது. அய்மான் சங்கப் பொதுச்செயலாளர் காயல் SAC ஹமீத் நன்றியுரை நிகழ்த்த துஆவுடன் நிகழ்ச்சி  நிறைவு பெற்றது.

இந் நிகழ்ச்சியில் அமீரகத்தில் உள்ள தமிழ் மக்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதேமில்லத் பேரவையும்அபுதாபி அய்மான் சங்கமும்  செய்திருந்தது.

செய்தி: தினகரன்
படங்கள்: ஆளூர் ஷாநவாஸ்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.